விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சி பல நடிகைகளுக்கு முக்கியமான நிகழ்ச்சியாக இருந்தது. அதன் மூலம் பலரும் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள்.
அப்படி பிரபலமான நடிகைகளில் விஜே தீபிகா முக்கியமானவர். ஆரம்பத்தில் தொகுப்பாளினியாகதான் தன்னுடைய வேலையை தொடங்கினார் நடிகை விஜே தீபிகா. ஆனால் அதற்குப் பிறகு அவருக்கு நடிப்பின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது.
தொடர்ந்து திரைத்துறையில் வாய்ப்புகளை தேடலாம் என முடிவு செய்தார் விஜே தீபிகா. அதற்கு தொகுப்பாளினியாக இருந்த அவரது பிரபலத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்று நினைத்தார் வி.ஜே தீபிகா. அந்த வகையில் அவருக்கு முதலில் சீரியலில்தான் வாய்ப்புகள் கிடைத்தது.
சீரியல்களில் வாய்ப்பு:
தொடர்ந்து நிறைய சீரியல்களில் நடித்து வந்தார். ஆனால் அவர் நடித்த சீரியல்களிலேயே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்தான் அதிகமாக வரவேற்பு பெற்ற சீரியலாக இருந்து வருகிறது. இந்த சீரியலில் ஐஸ்வர்யா என்னும் கதாபாத்திரத்தில் வி.ஜே தீபிகா நடித்து வருகிறார்.
பொதுவாகவே தமிழ் சீரியல்களில் தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பது அவ்வளவு எளிமையான காரியம் கிடையாது. மற்ற மொழி நடிகைகளுக்குதான் தமிழில் அதிகமாக வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. அப்படி இருந்தும் கூட அந்த போட்டியில் தனக்கான இடத்தை பிடித்திருக்கிறார் நடிகை வி.ஜே தீபிகா.
வி.ஜே தீபிகாவின் சொந்த ஊர் திருநெல்வேலி ஆகும். திருநெல்வேலி பக்கத்தில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்தான் வி.ஜே தீபிகா. காலேஜ் படிப்பிற்கு பிறகு பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் கயலின் தோழியாக நடித்திருப்பார் விஜே தீபிகா.
சினிமாவில் வாய்ப்பு தேடி வரும் நடிகை:
அதனை தொடர்ந்து அவர் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புகள் தேடி வந்தார். அந்த நேரத்தில் அவருக்கு சீரியல்களில் வாய்ப்புகள் கிடைத்தது. இடையில் அவருக்கு அதிகமாக முகப்பரு பிரச்சனை ஏற்பட்டதால் சீரியலில் இருந்து விலகி இருந்தார்.
அதனை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகை நடித்து வந்தார். இது மட்டுமின்றி வி.ஜே தீபிகா தனியாக யூடியூப் சேனல் துவங்கி அதிலும் நிறைய வீடியோக்களை போட்டு வருகிறார். இந்த நிலையில் பீரியட்ஸ் நேரங்களில் கோவிலுக்கு செல்வது குறித்து சர்ச்சையான சில விஷயங்களை பேசி இருக்கிறார் வி.ஜே தீபிகா.
அதில் அவர் கூறும் பொழுது பீரியட்ஸ் நேரத்திலும் நாங்கள் சாமி கும்பிடுவோம். எனது அப்பா என்னை பீரியட்ஸ் நேரத்திலும் சாமி கும்பிட அழைப்பார். அதனாலேயே நான் அதற்கு பழகி விட்டேன். பீரியட்ஸ் நேரத்தில் நாங்கள் பூஜை ரூமுக்கு கூட செல்வோம்.
என்னை பொறுத்தவரை எனக்கு உடம்பு சரியில்லை என்று தான் என்னுடைய சாமி நினைத்துக் கொள்ளும் என்று நினைக்கிறேன். இதற்காக என்னை கடவுள் ஒதுக்க மாட்டார். அனைவருமே கடவுளுக்கு முன்பு சமம் தான் என்று பேசி இருக்கிறார் விஜே தீபிகா. இதற்கு பலவிதமான எதிர்ப்புகளும் ஆதரவுகளும் வந்த வண்ணம் உள்ளன.