நயன்தாரா முதல் திரிஷா வரை.. எந்தெந்த உறுப்பில் பிளாஸ்டிக் சர்ஜரி..! புட்டு புட்டு வைத்த மருத்துவர்..!

சினிமாவில் நடிகர்களுக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் கிடைப்பதற்கும், அதே வாய்ப்புகள் நடிகைகளுக்கு கிடைப்பதற்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. கதாநாயகனாக நடிக்கும் நடிகர்களை பொருத்தவரை அவர்களது அழகை பெரிதாக மக்கள் பார்க்க மாட்டார்கள்.

நன்றாக நடிக்க தெரிந்திருந்தாலே அவர்களுக்கு போதுமானதாக இருக்கும் ஆனால் நடிகைகளை பொறுத்தவரை அவர்கள் முக அழகை தொடர்ந்து மேம்படுத்தி வந்தால் மட்டுமே வாய்ப்புகளை பெற முடியும். அவர்கள் அழகு குறைந்து விட்டால் உடனே அதற்கு பிறகு அவர்களுக்கு வாய்ப்புகளும் குறைந்துவிடும்.

இதனால் நடிகைகள் தொடர்ந்து முக அழகை மேம்படுத்த செயற்கை முக அழகு சிகிச்சைகளை செய்து கொள்கின்றனர். அப்படியாக தமிழ் சினிமாவில் எந்தெந்த நடிகைகள் என்ன மாதிரியான முக அழகு சிகிச்சைகள் செய்திருக்கின்றனர் என்று விளக்குகிறார் டெர்மடாலஜிஸ்ட் மருத்துவர் ஹமின் அனன்.

அவர் கூறும் பொழுது தமிழ் சினிமாவில் நயன்தாரா, சமந்தா, தமன்னா திரிஷா, அதிதி ராவ், ஸ்ருதிஹாசன் மாதிரியான பல நடிகைகளின் முகத்தோற்றத்தில் மாற்றத்தை பார்க்கலாம். அதற்கு காரணம் அவர்கள் செய்த காஸ்மெட்டிக் சிகிச்சைகள்தான் என்று கூறுகிறார் டெர்மடாலஜிஸ்ட் மருத்துவர் ஹமின் அனன்.

நயன்தாரா:

நடிகை நயன்தாராவை பொருத்தவரை அவர் புருவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர். அவருடைய ஒவ்வொரு திரைப்படத்திலும் அவரது புருவத்தில் வித்தியாசம் இருப்பதை பார்க்க முடியும். அதேபோல அவருடைய கண்ணம் மற்றும் மூக்குப்பகுதிகளிலும் சர்ஜரி செய்து இருக்கிறார் என்று கூறுகிறார் டெர்மடாலஜிஸ்ட் மருத்துவர் ஹமின் அனன்.

சமந்தா:

நடிகை சமந்தா முன்பு நடித்த படங்களுக்கும் இப்போது நடிக்கும் படங்களுக்கும் இடையே முகத்தில் அதிக மாற்றங்கள் அடைந்து இருப்பதற்கு முக்கிய காரணம் அவர் செய்த லிப் ஃபில்லர்ஸ் சிகிச்சை தான்.

24 திரைப்படத்தில் நடிக்கும் பொழுதே இதை அவர் செய்திருந்தார் உதட்டில் ஊசி போட்டு அதை பலூன் போல வீங்க வைத்து உதட்டை பெரிதாக தெரிய செய்வார்கள். 24 படத்தில் சமந்தா நடிக்கும் போது அவரது மேல் உதட்டை விட கீழ் உதடு பெரிதாக இருக்கும்.அதற்குப் பிறகு அது ஒரு மிஸ்டேக் என்று கூறி பிறகு அதை சரி செய்து கொண்டார் சமந்தா.

சுருதிஹாசன்:

நடிகை சுருதிஹாசனின் முகம் ஆரம்பத்தில் வட்டமாக இருந்தது. ஆனால் அதற்கு பிறகு சிகிச்சை செய்து ஓவல் ஷேப்புக்கு அவர் தன்னுடைய முகத்தை மாற்றி விட்டார். மேலும் சுருதிஹாசன் அதிகப்படியான காஸ்மெட்டிக் சர்ஜரிகளை செய்திருக்கிறார்.

த்ரிஷா:

நடிகை திரிஷா மூக்கு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். மூக்கு அறுவை சிகிச்சை என்பது சினிமாவில் பிரபலமான சிகிச்சை ஆகும். நடிகை ஸ்ரீதேவி கூட இந்த சிகிச்சை செய்திருக்கிறார். அதேபோல இவரும் லிப் ஃபில்லர்ஸ் என்னும் உதட்டுக்கான சிகிச்சையை மேற்கொண்டு இருக்கிறார்.

நடிகை தமன்னா, மௌனி ராய், அதிதி ராவ் என பலரும் இது மாதிரியான செயற்கையான சிகிச்சைகளை மேற்கொண்டு தங்களது முக அழகை மேம்படுத்தி இருக்கின்றனர். இந்த சிகிச்சைகளை செய்து கொண்டால் பாதிப்பு என்று பெரிதாக எதுவும் வராது என்று கூறுகிறார் டெர்மடாலஜிஸ்ட் மருத்துவர் ஹமின் அனன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version