குடிப்பழக்கத்தால் நடுத்தெருவிற்கு வந்த 5 தமிழ் நடிகைகள்… வாழ்க்கையே போச்சு.!

மது பழக்கம் என்பது எப்பொழுதுமே உயிருக்கு கேடான ஒரு விஷயமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாக பலரையும் பின்னடைய செய்து விடுகிறது. மது பழக்கம் என்பது ஏழை எளியவர்களில் துவங்கி பணக்காரர்கள் வரை அனைவரிடமும் ஒரு வியாதி போல பரவி இருக்கும் விஷயமாக இருக்கிறது.

அனுதினமும் ஏழைகள் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த மது பணக்காரர்களின் வாழ்க்கையிலும் பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது. முக்கியமாக நடிகைகள் பலர் இதற்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை இழந்திருக்கின்றனர். அப்படியான சில நடிகைகளை தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்

சாவித்திரி

நடிகை சாவித்திரி தமிழ் சினிமாவில் நடிகையர் திலகம் மகாநதி என்றெல்லாம் அழைக்கப்பட்டவர். எப்படி நடிகர்களில் சிவாஜி கணேசன் சிறந்த நடிகராக அறியப்படுகிறாரோ அதேபோல நடிகைகளில் சிறந்தவராக சாவித்திரி அறியப்பட்டார்.

அப்படி எல்லாம் இருந்தும் கூட சொந்த தயாரிப்பில் ஒரு படம் நஷ்டமானபோது சாவித்திரியால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனை தொடர்ந்து மதுவுக்கு அடிமையானார் சாவித்திரி. அவரது காதல் தோல்வியும் இதற்கு ஒரு காரணம் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் உண்டு.

அந்த மதுவுக்கு அடிமையான பிறகு தனது சொத்துக்கள் முழுவதையும் இழந்த சாவித்திரி பிறகு பட வாய்ப்புகளும் கிடைக்காமல் கடைசி காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தான் இறந்தார்.

நடிகை ஊர்வசி:

நடிகை ஊர்வசி தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு நடிகை ஆவார் நகைச்சுவை நடிகையான இவர் தொடர்ந்து சீரியசான கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். முந்தானை முடிச்சு மாதிரியான திரைப்படங்களின் மூலமாக பிரபலமான ஊர்வசி அதற்குப் பிறகு வெற்றி படங்கள் நிறைய கொடுத்திருக்கிறார்.

இப்போது வரை நிறைய திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இவர். இந்நிலையில் எப்படி நான் குடிக்கு அடிமை ஆனேன் என்று அந்த விஷயத்தை அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இவர் மலையாளத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது மனோஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் காதல் திருமணத்திற்கு முன்பிருந்த ஊர்வசிக்கு மது பழக்கம் இருந்தது அதனால் அவருக்கும் அவர் கணவனுக்கும் பிரச்சனை ஏற்பட்டது இறுதியில் அதனால் இருவரும் விவாகரத்து பெற்றனர். மேலும் எப்பொழுதும் ஊர்வசி குடித்துக் கொண்டிருப்பதால் அவர் தனது குழந்தையை பார்த்துக் கொள்ள மாட்டார் என்று கூறி அந்த குழந்தையையும் மனோஜ் நீதிமன்றம் மூலமாக பெற்றுக்கொண்டார். இப்படி ஊர்வசியின் திருமண வாழ்க்கையே மோசம் அடைந்ததற்கு மது முக்கிய காரணமாக இருந்தது.

நடிகை சதா:

நடிகை சதா தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக ஒரு காலகட்டத்தில் இருந்தவர் ஆவார். ஜெயம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் சதா. அதற்குப் பிறகு அன்னியன் மாதிரியான ஒரு சில படங்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.

அப்போது வரவேற்பு இருந்தும் கூட அதற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. அதற்கு முக்கிய காரணம் மது என்று கூறப்படுகிறது மேலும் புகைப்பழக்கத்துக்கும் அவர் அடிமையாக இருந்தார். இதனால் படப்பிடிப்பு தளங்களிலேயே புகை பிடிப்பது மது அருந்துவது போன்றவற்றை செய்திருக்கிறார்.

மேலும் படப்பிடிப்புகளுக்கும் அவர் ஒழுங்காக வருவதில்லை என்று கூறப்படுகிறது இதனால் தயாரிப்பாளர்களே பிறகு அவருக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்து இருக்கின்றனர்

சில்க் ஸ்மிதா:

சில்க் ஸ்மிதா தமிழ் சினிமாவின் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நடிகையாக இருப்பவர் ஆவார். சில்க் ஸ்மிதாவிற்காகவே அப்பொழுது திரைப்படங்கள் ஓடிய ஒரு காலகட்டம் இருந்தது. அதனால் அதிக சம்பளமும் அதிக வரவேற்பையும் பெற்றவராக சில்க் ஸ்மிதா இருந்து வந்தார்.

இந்த நிலையில் அவ்வளவு புகழ் இருந்தும் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டார் என்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவமாக அப்பொழுது இருந்தது. அதற்கு முக்கிய காரணமாக இருந்தது மது பழக்கம் தான் என்று கூறப்படுகிறது.

அவருக்கு இருந்த தவறான சகவாசங்களின் காரணமாக போதை பொருட்கள் மற்றும் மதுவின் மீது அதிக அடிமையானார் சில்க் ஸ்மிதா. அதன் காரணமாகதான் அதிகமான மன அழுத்தத்திற்கு உள்ளாகி இறுதியில் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.

 ஸ்ரீ வித்யா

நடிகை ஸ்ரீ வித்யா இயக்குனர் பாலச்சந்தர் மூலமாக தமிழ் சினிமாவில் வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்து வந்தவர் ஆவார். அவருக்கு நிறைய திரைப்படங்களில் அப்பொழுது வரவேற்பு கிடைத்தது. எக்கச்சக்கமான படங்களிலும் நடித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் நடிகர் கமல்ஹாசனை காதலித்து வந்த ஸ்ரீ வித்யாவிற்கு அந்த காதல் கைகூடவில்லை. அதற்கு பிறகு அவர் திரை உலகில் உள்ள வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த வாழ்க்கை அவருக்கு சுமூகமாக அமையவில்லை. தொடர்ந்து காசுக்காக ஸ்ரீ வித்யாவை வேலைக்கு அனுப்பி வந்தார் அந்த நபர். இதனால் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளான ஸ்ரீவித்யா தொடர்ந்து மது அருந்த ஆரம்பித்தார். இந்த மது பழக்கம் எல்லை கடந்து போய் கடைசியில் கணவனையும் விவாகரத்து செய்துவிட்டார் ஸ்ரீவித்யா மேலும் மது பழக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு பிறகு சீக்கிரம் அவர் இறந்தும் விட்டார் என்று கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version