மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து பிரபலமான ஒரு சில நடிகைகளில் நடிகை அஞ்சு குரியனும் ஒருவர். 2013 ஆம் ஆண்டு நடிகர் நிவின்பாலி நடிப்பில் நேரம் என்கிற திரைப்படம் தமிழிலும் மலையாளத்திலும் வெளியானது.
அந்த திரைப்படத்தில் துணை கதாபாத்திரமாக திரையில் தோன்றினார் அஞ்சு குரியன். அதற்குப் பிறகு வரிசையாக நிவின்பாலியின் திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மலையாளத்தில் ஓம் சாந்தி ஒசனா, பிரேமம் ஆகிய திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
தமிழில் வாய்ப்பு:
இந்த நிலையில் தமிழில் 2017 ஆம் ஆண்டு சென்னை டு சிங்கப்பூர் என்கிற திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பிறகு மீண்டும் மலையாளம் தெலுங்கு என்று மிக பிஸியாகிவிட்டார் நடிகை அஞ்சு குரியன்.
திரும்ப ஜூலை காற்றே என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். வாய்ப்புகளைப் பொறுத்தவரை அஞ்சு குரியனுக்கு மிக குறைவாகவே வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. ஆனாலும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதை அவர் விட்டு விடுவதாக இல்லை.
இதற்கு நடுவே ஆல்பம் பாடல்கள் டிவி சீரியல்கள் குறும்படங்கள் என்று இந்த மாதிரியான சின்ன சின்ன விஷயங்களில் அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார் அஞ்சு குரியன். 2022 ஆம் ஆண்டு வந்த சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
வாய்ப்புகளில் தொய்வு:
அதனை தொடர்ந்து தமிழில் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் என்கிற திரைப்படத்திலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த திரைப்படங்கள் எதுவுமே பெரிதாக வரவேற்பை பெறவில்லை. தற்சமயம் மலையாளத்தில் அவரது நடிப்பில் ஆபிரகாம் ஓசிலர் என்கிற திரைப்படம் வெளியாகி இருந்தது.
அந்த திரைப்படத்திற்கு மலையாளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது நடிகர் ஜெய்ராம் மற்றும் மம்மூட்டி இருவரும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த நிலையில் பெரிதாக வரவேற்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதற்காக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அஞ்சு குரியன்.
அந்த வகையில் அவர் சமீபத்தில் வெளியிட்ட திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. மேலும் தமிழில் இவருக்கு இன்னமும் வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.