ராத்திரி நேரம்.. சாலையோர கடை முன்பு பின்னழகை காட்டி.. கிறங்கடிக்கும் பாவனி ரெட்டி..!

ஹிந்தி தமிழ் தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் பவானி ரெட்டி. தமிழில் இவர் பிக் பாஸ் சீசன் ஐந்தில் கலந்து கொண்டதன் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்தார்.

மேலும் தமிழ் டிவி சீரியலான சின்னதம்பி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார். முதன்முதலாக ஹிந்தி சினிமாவில்தான் அறிமுகமானார் பவானி ரெட்டி. ஆனால் ஹிந்தி சினிமாவில் அறிமுகமாகும் எல்லா நடிகைக்கும் ஹிந்தியில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பது கிடையாது.

தென்னிந்திய வாய்ப்பு:

அப்படி வாய்ப்புகள் கிடைக்காத பொழுது அடுத்து அந்த நடிகைகள் தேர்ந்தெடுக்கும் துறையாக தென்னிந்திய சினிமாத்துறைதான் இருக்கும். அந்த வகையில் அடுத்து தொடர்ந்து தெலுங்கில் நடிக்க தொடங்கினார் பவானி ரெட்டி.

தொடர்ந்து ராதா மோகனின் இயக்கத்தில் கௌரவம் என்கிற திரைப்படத்தில் நடித்தார் பவானி ரெட்டி. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் வெளியானது. சாதிய கௌரவ கொலைகளை கருவாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம் திரையரங்குகளில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட மக்கள் மத்தியில் அதற்குப் பிறகு நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து ஓரளவு அறியப்பட்ட நடிகையாக பவானி ரெட்டி இருந்தார். பிறகு 2015 ஆம் ஆண்டு அவரது நடிப்பில் வஜ்ரம் என்கிற திரைப்படம் வெளியானது. அதுவும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை 2017 இல் மொட்ட சிவா கெட்ட சிவா என்கிற லாரன்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக ஓரளவு வரவேற்பை பெற்றார் பவானி ரெட்டி.

தொடர்ந்து வாய்ப்பு:

பிறகு ஜூலை காற்றே என்கிற திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படத்திற்கு ஓரளவு வரவேற்பும் கிடைத்தது. போன வருடம் அஜித் நடித்து வெளியான துணிவு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

இப்படி சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் கூட பெரும் படங்களில் நடித்து வருவதால் இவருக்கு வரவேற்பு என்பது வந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் இவரை இன்னமும் அதிக பிரபலம் ஆக்கி உள்ளது.

இந்த நிலையில் கவர்ச்சி உடையில் இரவு நேரத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் தற்சமயம் அதிக வைரலாகி வருகிறது. சாலையோர கடை முன்பு நின்று இந்த புகைப்படங்களை எடுத்து இருக்கிறார் பவானி ரெட்டி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version