வனிதா கிட்ட கண்டிப்பா பேசவே.. கஸ்தூரியை பார்த்தால் இதான்.. அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து ஜாங்கிரி மதுமிதா..!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் இருந்தது போலவே காமெடி நடிகைகளும் இருந்தார்கள். முன்பு மனோரமா சச்சு போன்ற நடிகைகள் இருந்தார்கள். அதற்கு பிறகு கோவை சரளா போன்ற நடிகைகள் காமெடி நடிகைகளாக இருந்தனர்.

ஆனால் தற்போதைய தலைமுறையில் காமெடி நடிகைகள் என்பவர்கள் குறைவாகவே இருந்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற காமெடி நடிகையாக தொடர்ந்து இருந்து வருபவர் நடிகை மதுமிதா.

காமெடி நடிகை:

மதுமிதா சந்தானத்தோடு சேர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவர் நடித்த திரைப்படங்களில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஒரு கல் ஒரு கண்ணாடி மாதிரியான திரைப்பட காமெடிகள் மிகவும் பிரபலமானவை.

சமீபகாலமாக மதுமிதாவை நிறைய திரைப்படங்களில் பெரிதாக பார்க்க முடியவில்லை. அதற்கு என்ன காரணம் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது எனக்கு கர்ப்பமாக இருந்த காரணத்தினால் சில காலங்கள் நான் படங்களில் நடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

மேலும் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த மதுமிதா கூறும்பொழுது முதன்முதலாக சினிமாவிற்கு நான் வந்த பொழுது அட்ஜஸ்ட்மென்ட் அதிகமாக இங்கு இருக்கும் என்று கூறினார்கள். ஆனால் நான் வந்த காலம் முதல் இப்போது வரை என்னை யாரும் அப்படி அட்ஜஸ்ட்மெண்ட்க்கு அழைத்தது கிடையாது.

அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள்:

என்னை சுற்றி உள்ள எல்லோரும் நல்லவர்களாக இருக்கின்றனர். சினிமாவில் ஒரு சிலர் செய்கிற தவறு மொத்தமாக சினிமாவை தவறாக காட்டுகிறது என்று நினைக்கிறேன் என்று கூறியிருந்தார். மேலும் அவர் குழந்தை பெற்ற ஐந்து மாதத்திலேயே படப்பிடிப்புக்கு சென்ற நிகழ்வுகளை பகிர்ந்து இருந்தார்.

அதில் கூறும் பொழுது குழந்தைக்கு பால் கொடுத்து வந்ததால் அப்பொழுதெல்லாம் மிகவும் பசிக்கும். ஆனால் படப்பிடிப்பு துவங்கி விட்டால் இரண்டரை மணி நேரத்திற்கு எதுவும் கேட்க முடியாது. குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும் என்றால் கூட படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் கேட்டுவிட்டு செல்ல வேண்டிய நிலை இருந்தது.

இதனால் எனது மகன் வயிற்றில் இருக்கும்பொழுது நான் அவனிடம் நான் சினிமாவிற்குதான் முக்கியத்துவம் கொடுப்பேன் என்பதை சொல்லி வளர்த்திருக்கிறேன் என்று கூறுகிறார் மதுமிதா.

பிக்பாஸ் பிரபலங்கள்:

இந்த நிலையில் பிக் பாஸில் பங்கு பெற்ற பிரபலங்களை நேரில் பார்த்தால் என்ன கேட்பீர்கள் என்று கேட்ட பொழுது கஸ்தூரி அவர்களுடன் நிறைய பிக் பாஸில் பிரச்சனை ஏற்பட்டது. ஆனால் அவர்களை நேரில் பார்த்தால் அது குறித்து நான் பேசமாட்டேன். ஏனெனில் நமது குடும்பத்திலேயே ஒரு பிரச்சனை வருகிறது என்றால் வெகு காலம் கழித்து அந்த குடும்ப உறுப்பினரை சந்திக்கும் பொழுது அந்த பிரச்சினை பற்றியா நாம் பேசுவோம்.

அதனால் அவர்களிடம் நல்லா இருக்கிறீர்களா என்று கேட்பேன் அவர்களுக்கு ஏழு மொழிகளில் எழுதவும் படிக்கவும் தெரியும். அதன் ரகசியம் என்னவென்று கேட்பேன். அதேபோல கமல் சாரை நேரில் பார்த்தால் எப்போது சதி லீலாவதி 2 படம் எடுப்பீர்கள் என்று கேட்பேன்.

வனிதாவை நேரில் பார்த்தால் நன்றாக இருக்கிறீர்களா என்று கேட்பேன் அதிகபட்சம் அவரிடம் நான் பேசமாட்டேன் ஒருவேளை அவர் என்னிடம் வந்து பேசினால் நானும் பேசுவேன். அவருடன் திரைப்படங்களில் நடிப்பதாக இருந்தால் முழு மனதுடன் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார் மதுமிதா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version