காலேஜ் படிக்கும் போது.. லேடிஸ் ஹாஸ்டலில்.. காதலனுடன் அந்த கோலத்தில் சிக்கிய பிரியா பவானி ஷங்கர்..!

சின்னத்திரை மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமாகி தற்சமயம் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். ஆரம்பத்தில் தொகுப்பாளனியாக பணிபுரிந்து வந்த ப்ரியா பவானி சங்கருக்கு சின்னத்திரையில் நாடகங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது.

அவர் நடித்த நிறைய நாடகங்கள் அவருக்கு அதிக வரவேற்பு பெற்று கொடுத்ததை அடுத்து சினிமாவில் வாய்ப்பை பெற்றார் ப்ரியா பவானிசங்கர். பெரும்பாலும் சீரியலில் நடிக்கும் நடிகைகள் எல்லோருக்கும் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் உடனே கிடைத்து விடுவது இல்லை.

ஆனால் பிரியா பவானி சங்கர் மாதிரியான ஒரு சில நடிகைகளுக்கு அப்படி வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. சினிமாவில் நடிகை ஆன பிறகும் கூட மிகவும் சிம்பிளாக இருந்து வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். நிறைய கடை திறப்பு விழாக்கள் மாதிரியான பல விழாக்களில் இவர் கலந்து கொள்வதை பார்க்க முடியும்.

தனித்துவமான நடிகை:

பிரியா பவானி சங்கர்தான் தமிழ் சினிமாவிலேயே பெரிதாக தொழில் அதிபர் அல்லது பிரபலங்களை காதலித்து திருமணம் செய்து கொள்ளாமல் கல்லூரி காலங்களில் அவர் காதலித்த நபரையே திருமணம் செய்ய இருக்கும் நடிகையாக இருக்கிறார்.

அதனால் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்து வருகிறது கல்லூரி காலத்தில் நடந்த நிகழ்வு ஒன்றை அவர் தனது பேட்டியில் பகிர்ந்து இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது அந்த சமயத்தில் எனக்கும் என்னுடைய காதலருக்கும் இடையே காதல் ஆரம்பமாகி இருந்தது.

ஹாஸ்டலில் தங்கி இருந்த காலகட்டங்களில் எங்களுக்கு ஒரு விதிமுறை உண்டு. வார இறுதியில் இரண்டு மணி நேரங்கள் மட்டும் வெளியே நாங்கள் செல்லலாம். மற்ற நேரங்களில் எல்லாம் ஹாஸ்டலில்தான் இருக்க வேண்டும். அந்த நேரங்களில் நான் என்னுடைய காதலருடன் வெளியே செல்வதற்கு திட்டமிட்டிருந்தேன்.

கல்லூரி நிகழ்வு:

அதேபோல எனது காதலரும் என்னை அழைப்பதற்கு வந்தார். ஆனால் அந்த சமயத்தில் எங்கள் ஹாஸ்டல் வார்டன் அந்த பக்கமாக வந்துவிட்டார். அவர் என்னுடைய காதலரை பார்த்து உங்கள் ஹெல்மெட்டை கழட்டுங்கள் என்று கூறினார்.

உடனே என்னுடைய காதலரும் அவருடைய ஹெல்மெட்டை கழட்டினார் அதனை பார்த்த வார்டன் என்னமா ஒரு பையன் கூட செல்கிறாய் என்று கேட்டார். அப்போது அதை எப்படி சமாளிப்பது என்று எனக்கு தெரியவில்லை உடனே நான் என்னுடைய அவுட்டிங் டைம் இது.

நான் யாருடன் வேண்டுமானாலும் போவேன் நீங்கள் பிரின்சிபல் கிட்ட சொல்றதாக இருந்தாலும் சொல்லுங்கள். அல்லது எனது பெற்றோர்களிடம் சொல்வதாக இருந்தாலும் சொல்லுங்கள் என்று கூறிவிட்டேன். அதனை கேட்டு வார்டன் அதிர்ச்சி அடைந்து விட்டார் என்று பிரியா பவானி சங்கர் அந்த சம்பவத்தை விளக்கியிருந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தன்னுடைய காதலரின் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார் பிரியா பவானி சங்கர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version