ரொம்ப நாள் கழிச்சி கவர்ச்சி பிக் விட்ட சமந்தா.. பழைய சமந்தா எங்கப்பா.. வருந்தும் ரசிகர்கள்!.

தமிழ் சினிமாவில் வரவேற்பு பெற்ற நடிகைகளில் மிக முக்கியமான ஒரு நடிகையாக சமந்தா இருந்து வருகிறார். இந்த நிலையில் சமந்தா குறித்து நிறைய சர்ச்சைகளும் பிரச்சனைகளும் அவரது பொது வாழ்க்கையில் இருந்தாலும் கூட நடிப்பை பொறுத்தவரை சமந்தாவிற்கென்று ஒரு தனிப்பட்ட ரசிகர்கள் இருக்கதான் செய்கிறார்கள்.

சமந்தா தமிழ் சினிமாவில் மிக இளம் வயதிலேயே அறிமுகமானார். சிறு வயதிலேயே மாஸ்கோவின் காவேரி பானா காத்தாடி மாதிரியான திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார் சமந்தா. ஆனால் அந்த திரைப்படங்களில் எல்லாம் அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை.

நடிகை சமந்தா

மேலும் அப்பொழுது அவருக்கு இப்போது இருக்கும் அளவிற்கு நடிக்கவும் தெரியவில்லை. கொஞ்சம் சுமாரான நடிப்பைதான் அந்த படங்களில் வெளிபடுத்தி இருந்தார்.

அதற்கு பிறகு அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக நடிக்க கற்றுக் கொண்டு நான் ஈ மாதிரியான திரைப்படங்களில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தினார். மேலும் அதன் மூலம் அதிக வரவேற்பை பெற்றார். இதனால் தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் முக்கிய நடிகையானார் சமந்தா.

பழைய சமந்தா எங்கப்பா

சமந்தா நடித்த திரைப்படங்களிலேயே தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற படம் நீதானே என் பொன் வசந்தம். அந்த திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருக்கும் சமந்தாவை பலரும் ரசித்து வந்தனர்.

அந்தப் படத்திற்குப் பிறகு நடிகை சமந்தா தொடர்ந்து நிறைய படங்களில் வெற்றியை கொடுத்து வந்தார். விஜய் மாதிரியான பெரிய நடிகர்களுடனும் நடிக்க தொடங்கினார். அவருடைய மார்க்கெட் வெகு சீக்கிரத்திலேயே பெரிதாக மாறியது.

வருந்தும் ரசிகர்கள்

பிறகு திருமணம் செய்து கொண்டார் சமந்தா. தொடர்ந்து அப்பொழுதும் நடித்துக் கொண்டுதான் வந்தார். பிறகு திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனது கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்தார் சமந்தா.

அதற்குப் பிறகு அவருக்கு மாயோசிட்டிஸ் என்னும் ஒரு வகை நோய் ஏற்பட்டதன் காரணமாக சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது. அதனால் சில வருடங்கள் இடைவெளி விட்ட சமந்தா தனது உடலை பார்த்துக்கொண்டு வந்தார்.

இடையில் அவ்வப்போது சினிமாவிற்கு வர நினைத்தாலும் கூட அதற்கு அவரது உடல் ஒப்புக்கொள்ளவில்லை. இந்த நிலையில் ஓரளவு சரியாகி இப்பொழுது தொடர்ந்து மீண்டும் சினிமாவின் மீது கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா.

இந்த நிலையில் உடல் சரியான பிறகு கொஞ்சம் கவர்ச்சி காட்டி அவர் தற்சமயம் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதில் பார்க்கும் பொழுது சமந்தா முன்பை விட மிகவும் உடல் எடை குறைந்து காணப்படுவதை பார்க்க முடிகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் சிலர் இது நம்ம சமந்தா தானா? அடையாளமே தெரியவில்லை என்று கூறுகின்றனர் அந்த அளவிற்கு அவரது முகத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version