95% அதை எதிர்பார்க்குறாங்க!.. 10 வருட வாழ்க்கையில் ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள்.! பிரபல நடிகை பகீர் தகவல்.!

அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்கள் என்பது எப்போதுமே சினிமாவில் தலை தூக்கி வரும் ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. தொடர்ந்து பெண்கள் சினிமா துறைக்கு செல்ல பயப்படுவதற்கு இதுவே முக்கிய காரணமாகவும் இருக்கிறது.

இப்போது எல்லாம் சீரியல் நடிகைகளுக்கு கூட இந்த பிரச்சினைகள் வருவதாக ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த நிலையில் சில நடிகைகள் கூறும் பொழுது தாங்கள் பெரிதாக அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனையை சந்தித்ததில்லை என கூறும் பொழுது அது ஐயத்தை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கிறது.

அதை எதிர்பார்க்குறாங்க

உதாரணத்திற்கு பிரபல கவர்ச்சி நடிகை ஷகிலாவே பேட்டிகள் கூறும் பொழுது ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டும்தான் என்னை அட்ஜஸ்ட்மெண்ட் என்று அழைத்தார்கள். அதுவும் தெலுங்கு திரைப்படத்தில் மட்டும்தான், மற்றபடி மலையாள படத்தில் என்னை அட்ஜஸ்ட் செய்வதற்கு அழைத்ததே கிடையாது என்று கூறியிருப்பது அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருக்கிறது.

அதேபோல தமிழில் பிரியா பவானி சங்கர் மாதிரியான சில நடிகைகளும் அவர்களது பேட்டியில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினைகளை பெரிதாக அனுபவித்தது கிடையாது என்று கூறி இருக்கின்றனர். ஆனால் தற்சமயம் நடிகை காயத்ரி கூறியிருக்கும் விஷயங்கள் அதற்கெல்லாம் எதிர்மறையாக இருக்கின்றன.

ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள்

நடிகை காயத்ரி கடந்த 10 வருடங்களாகவே தமிழ் சினிமாவில் இருந்து வரும் நடிகையாக இருக்கிறார். இவர் கூறும் பொழுது ஆரம்பத்தில் நாங்கள் சினிமாவிற்கு வரும்பொழுது இந்த அட்ஜஸ்ட்மென்ட் விஷயங்கள் எல்லாம் எங்களுக்கு தெரியாது.

பட வாய்ப்புகள் கிடைக்கும் பொழுது இயக்குனர்களோ அல்லது தயாரிப்பாளர்களோ நேரடியாகவே அந்த படத்தில் உங்களை எடுக்க வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்பார்கள்.

ஆனால் எங்களுக்கு அதில் ஒரு நன்மையும் உண்டு ஒரு தீமையும் உண்டு நன்மை என்னவென்றால் படத்தில் கமிட் ஆவதற்கு முன்பே இவர்கள் கேட்டு விடுவதால் நமக்கு பிடிக்கவில்லை என்றால் படத்தை விட்டு விலகி விடலாம் அவர்கள் நம்மை வற்புறுத்த போவது கிடையாது.

பிரபல நடிகை பகீர் தகவல்

அதே சமயம் தீமை என்னவென்றால் அந்த படம் நம் கைவிட்டு போய்விடும் இது ஆரம்பத்தில் பெரிதாக பாதிக்காது. நாம் தொடர்ந்து அட்ஜஸ்ட்மெண்ட் தொடர்பான விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவோம். ஆனால் சில வருடங்கள் கழித்த பிறகு பெரிதாக எந்த படத்திலும் நடித்திருக்க மாட்டோம்.

அப்பொழுதுதான் நாம் ஏதோ தவறு செய்து விட்டோமோ என்று நினைப்போம். இந்த நேரத்தில் திரும்பவும் ஒரு பெரிய ஹீரோ திரைப்படத்தில் வாய்ப்பு கிடைக்கும்.

அப்பொழுது இந்த அட்ஜஸ்ட்மெண்டிற்கு ஒப்புக்கொண்டு போய்விடலாமா என்று கூட தோன்றும். ஏனெனில் அதற்காக வற்புறுத்தும் ஆட்கள் பேசும் பொழுது பெரிய நடிகைகளே இதையெல்லாம் கடந்துதான் வந்துள்ளனர் என்று கூறி நியாயப்படுத்துவார்கள். அதேசமயம் நல்ல இயக்குனர்களும் தமிழ் சினிமாவில் இருக்கின்றனர். ஆனால் நான் பார்த்தவரை சினிமாவில் 95% பேர் இந்த அட்ஜஸ்ட்மென்ட்டை எதிர்பார்க்கக் கூடியவர்கள்தான் என்று அதிர்ச்சி தகவலை கொடுத்திருக்கிறார் நடிகை காயத்ரி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version