சிவாஜியின் கடைசி கால பரிதாபம்.! முதுமையில் பிரபு கவனிக்கவில்லை..?

தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலும் நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணமாக போற்றப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன். பெரும்பாலும் சிவாஜி கணேசன் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே வெற்றி படங்கள்தான் என்கிற பெயர் அப்போது இருந்தது.

முதன் முதலில் தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இடையே போட்டி என்பதை ஆரம்பித்து வைத்தவர்கள் சிவாஜியும் எம்ஜிஆரும்தான் அவர்களது காலகட்டங்களில் இருவரும் போட்டி போட்டு நடித்த படங்களை வெளியிட தொடங்கினர்.

சிவாஜி

அவர்கள் போன பிறகும் இப்போதும் அந்த போட்டி சினிமாவில் நிலவிக் கொண்டுதான் இருக்கிறது. ஏன் சிவாஜி கணேசனை எல்லோரும் நடிகர் திலகம் என்றும் நடிப்புக்கு ஒரு உதாரணமாகவும் கூறுகிறார்கள் என்றால் சிவாஜி கணேசனை போல ஒரு நடிப்பை வெளிப்படுத்திய ஆளை தமிழ் சினிமாவில் திரும்ப இப்பொழுது வரை யாரும் பார்க்கவில்லை என்று கூறலாம்.

இதற்காக உலக அளவில் புகழ் பெற்றவர் நடிகர் சிவாஜி கணேசன். இந்த நிலையில் சிவாஜி கணேசன் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது சிவாஜி கணேசன் நடிப்பதை பலரும் ஓவர் ஆக்டிங் என்று கூறி நான் கேட்டிருக்கிறேன்.

ஆனால் சிவாஜிக்கு அனைத்து விதமான நடிப்புகளையும் நடிக்க தெரியும் நாடகங்களில் நடித்த பொழுதே மக்கள் என்ன மாதிரியான நடிப்பை விரும்புகிறார்கள் என்று அவர் தெரிந்து கொண்டார். அவர் நடித்த அந்த காலகட்டத்தில் அந்த நடிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

கடைசி கால பரிதாபம்

ஆனால் அப்படி மட்டும்தான் சிவாஜி கணேசன் நடிப்பார் என்று கிடையாது. எப்படி நடிக்க சொன்னாலும் அவரால் அப்படியே நடிக்க முடியும் அப்படியான திறன் பெற்றவர்தான் சிவாஜி கணேசன். இப்பொழுது இருக்கும் ரஜினி கமல் போல சிவாஜி கணேசன் அறுபது வயதுகளுக்கு பிறகும் கூட கதாநாயகனாகவே நடிக்கவில்லையே அது ஏன் என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த செய்யாறு பாலு கூறும் பொழுது சிவாஜி கணேசனுக்கு இடையில் உடல் நலம் மோசமானது. அதற்குப் பிறகு அவரது உடல் எடையும் கணிசமாக குறைந்தது. இந்த நிலையில் இனி கதாநாயகனாக நடிக்க முடியாது என்பதை அவரை அறிந்திருந்தார்.

அதிலும் ஒரு கட்டத்திற்கு பிறகு அவர் சினிமாவில் நடிக்கவே கூடாது என்று அவரது குடும்பத்தினர் கூறிவிட்டனர். தேவர் மகன் படத்தின் படப்பிடிப்பு நடந்த போது கூட சிவாஜி நடிப்பதற்கு அவரது குடும்பத்தார் ஒப்புக்கொள்ளவே இல்லை.

முதுமையில் பிரபு கவனிக்கவில்லை

ஆனால் கமல்ஹாசன்தான் பேசி இதில் சிவாஜி கணேசன் நடித்தால் மட்டும் தான் நன்றாக இருக்கும் என்று கூறி அந்த படத்தில் சிவாஜியை நடிக்க வைத்தனர் இறுதி காலகட்டம் வரையிலுமே சிவாஜி கணேசனுக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகமாகதான் இருந்து வந்தது.

ஆனால் அவரது உடல் அதற்கு ஒத்துவரவில்லை. அவரது இறுதி காலக்கட்டங்கள் அவருக்கு மிக மோசமானதாகதான் இருந்தது சிலர் கூறும் பொழுது இறுதி காலகட்டங்களில் சிவாஜியை பிரபு சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என்று கூறுகின்றனர். ஆனால் அதில் எந்த உண்மையும் கிடையாது.

இறுதி காலகட்டங்கள் வரை சிவாஜி கணேசன் அவரது வீட்டில் தான் நல்லபடியாக பார்த்துக் கொள்ளப்பட்டார் என்று இந்த தகவல்களை பகிர்ந்திருக்கிறார் செய்யாறு பாலு.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version