கவர்ச்சி காட்டுவாதில் திரிஷாவுக்கே டஃப் கொடுக்கும் பிரபல நடிகை சரண்யா பொன்வண்ணன்..! வைரலாகும் சின்ன வயசு போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் தற்சமயம் இருக்கும் முக்கால்வாசி இளம் நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சரண்யா. வெகு காலங்களாகவே இவர் தமிழ் சினிமாவில் பயணித்து வருகிறார் என்று கூறலாம்.

ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்த சரண்யா அதற்குப் பிறகு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். ஆனால் கதாநாயகியாக நடித்ததை விடவும் அம்மா கதாபாத்திரத்தில்தான் அவருக்கு வரவேற்புகள் அதிகமாக இருந்து வருகின்றன.

ஏனெனில் இப்போதைய தலைமுறையினர் பலரும் சரண்யாவை அம்மா கதாபாத்திரத்தில்தான் அடையாளம் காண்கின்றனர். மேலும் வேலையில்லா பட்டதாரி மாதிரியான திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரம் என்றாலும் கூட கதையின் முக்கிய கதாபாத்திரமாக இருந்ததால் சரண்யாவிற்கு தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரவேற்பு இருந்து வருகிறது.

தமிழில் அறிமுகம்:

1987 இல் வெளியான நாயகன் திரைப்படத்தில் முதன்முதலாக கமலுக்கு ஜோடியாகதான் அறிமுகமானார் சரண்யா. அதற்கு பிறகு அவருக்கு நிறைய படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து மனசுக்குள் மத்தாப்பு என்கிற திரைப்படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார்.

இப்படியாக தொடர்ந்து பெரும் நடிகர்கள் திரைப்படத்தில் அவர்களின் ஜோடியாக நடிக்க இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. 1996க்கு பிறகு சினிமாவிலிருந்து திடீரென்று விலகிவிட்டார் சரண்யா. நடிகர் பொன்வண்ணனை அவர் திருமணம் செய்து கொண்டதால் அப்பொழுது சினிமாவை விட்டு விலகியதாக ஒரு பேச்சு இருந்து வந்தது.

அதன் பிறகு வெகு காலங்கள் சினிமாவிலேயே அவர் நடிக்கவில்லை. பிறகு 2003 ஆம் ஆண்டு மீண்டும் அலை என்கிற திரைப்படம் மூலமாக ரீ எண்ட்ரி கொடுத்தார் சரண்யா. அதற்கு பிறகுதான் அவர் நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் அம்மா கதாபாத்திரத்தை எடுத்து நடிக்க துவங்கினார் சரண்யா.

அம்மா கதாபாத்திரம்:

தொடர்ந்து அவர் நடித்த திரைப்படங்களில் ராம் திரைப்படம் அதிக வரவேற்பு பெற்றது. ஏனெனில் ராம் திரைப்படத்தை பொருத்தவரை அதில் தனது அம்மாவை கொன்றதற்காக கதாநாயகன் பழி வாங்குவதாகதான் கதையே இருக்கும் எனும் பொழுது அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக சரண்யா இருந்தார்.

தொடர்ந்து சிவகாசி, தவமாய் தவமிருந்து, எம் மகன், திருவிளையாடல் ஆரம்பம் என்று பெரும் நடிகர்கள் திரைப்படத்தில் அவர்களுக்கு அம்மாவாக நடித்து வந்தார் சரண்யா. எக்கச்சக்கமான திரைப்படங்களில் அம்மாவாக நடித்தார்.

விஜய் சேதுபதிக்கு அம்மாவாக தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் நடித்ததற்கு அவருக்கு அதிக விருதுகள் கிடைத்தது. மேலும் ஒரு கல் ஒரு கண்ணாடி, நீர்பறவை, வேலையில்லா பட்டதாரி ,24, ரெமோ, கொடி என்று எக்கச்சக்கமான திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் இவர் நடித்திருக்கிறார்.

ஆனால் இளமை காலங்களில் கதாநாயகியாக நடித்த பொழுது சரண்யா எப்படி இருந்தார் என்பது இப்போதைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த நிலையில் அப்பொழுது மிகவும் அழகாக இருந்த சரண்யாவின் இளமைக்கால புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளது அவை தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version