இது தான் என்னோட கடைசி படம்ன்னு பில்டப் பண்ணுங்க.. மண்டை மேல இருக்க கொண்டையை மறந்த மாஸ் நடிகர்..!

சினிமாவில் திரைபடங்களை வெற்றி பெற செய்வதற்கு ஏகப்பட்ட விஷயங்களை படப்பிடிப்பு குழுக்கள் செய்து வருவதுண்டு. சில படங்களுக்கு அவர்களே புரளியை கிளப்பிவிட்டாவது அந்த திரைப்படத்தை வெற்றி பெற வைப்பார்கள்.

இன்னும் சில திரைப்படங்களுக்கு அந்த படம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதை பார்க்க முடியும். அந்த வழக்கு தொடுவதே படக்குழுவை சேர்ந்த ஆளாகதான் இருக்கும். ஏனெனில் ஏதாவது ஒரு படம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் அந்த திரைப்படம் உடனே கொஞ்சம் வெற்றியடைந்துவிடும்.

அதனை தொடர்ந்து படத்தையும் எளிதாக பப்ளிசிட்டி செய்துவிட முடியும் என்கிற நிலை இருக்கிறது. இந்த நிலையில் தன்னுடைய திரைப்படத்தை நெகட்டிவ் முறையில் பப்ளிசிட்டி செய்வதற்கு ஒரு மாஸ் நடிகர் பெரும் பிளானை செய்திருக்கிறார்.

ஹீரோவின் ப்ளான்:

ஆனால் கடைசியில் அந்த பிளான் சொதப்பலில் முடிந்திருக்கிறது. பிரபலமான இந்த மாஸ் நடிகர் கடைசியாக நடித்த மூன்று படங்களும் பெரிதாக சொதப்பி வந்தது. இந்த நிலையில் அடுத்து நடிக்கும் திரைப்படத்தை எப்படியாவது ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற வைத்துவிட வேண்டும் என்று முடிவு செய்தார் இந்த மாஸ் நடிகர்.

ஏற்கனவே ஒரு தயாரிப்பு நிறுவனத்துடன் கமிட்டாகி பிறகு அந்த நிறுவனத்துடன் பிரச்சனை ஏற்பட்டதால் அதை விட்டு விலகி வந்துவிட்டார் இந்த நடிகர். இந்த நிலையில்தான் தற்சமயம் ஒரு திரைப்படத்தில் கமிட்டாகி இருக்கிறார்.

ஏற்கனவே மூன்று படங்கள் தோல்வியை கண்டதால் இந்த திரைப்படமும் தோல்வியை கண்டுவிட்டால் அதற்குப் பிறகு இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைக்குமா? என்பதே சந்தேகமான விஷயம் என்பதால் இந்த திரைப்படம்தான் அவரது சினிமா வாழ்க்கையே முடிவு செய்ய உள்ள திரைப்படமாக இருக்கிறது.

கதாநாயகனின் அறிவிப்பு:

இந்த நிலையில் இந்த திரைப்படத்தை ஓட வைப்பதற்காக இதுதான் அவருடைய இறுதி திரைப்படம் என்று அறிவித்து இருக்கிறார் நடிகர். மேலும் இந்த திரைப்படத்திற்கு பிறகு வேறு சில பிளான்களும் அவரிடம் இருக்கின்றன என்று கூறப்படுகிறது.

தற்சமயம் அந்த திட்டங்களிலும் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதால் இந்த திரைப்படத்தை கண்டிப்பாக வெற்றி திரைப்படம் ஆக்கிவிட வேண்டும் என்கிற நிலையில் இருக்கிறார் கதாநாயகன். ஆனால் இவரது அடுத்த திரைப்படத்தை கமிட் செய்திருக்கும் கன்னட தயாரிப்பு நிறுவனம் இந்த விஷயம் எதையும் அறியாமல் அவர் அடுத்த படம் எங்களுடன்தான் செய்யப் போகிறார் என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறது.

இவர் இப்பொழுது தானே தன்னுடைய படம் கடைசி திரைப்படம் என்று அறிவித்தார் என்று இதனால் ரசிகர்கள் குழம்பி இருக்கின்றனர் இப்படி மண்டை மேல் இருந்த கொண்டையை மறந்து விட்டோமே என்று கதாநாயகன் இந்த விஷயத்தில் அப்சட்டாக இருக்கிறாராம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version