தாயைப் போலவே தாய்மாமன் உறவும் முக்கியமான ஒன்று என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். எனவே தான் அவரை தாய் மாமன், தாய்க்கு அடுத்த இடத்தை கொடுத்து உறவு முறைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தக்கூடிய வகையில் நமது முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகர்களின் உண்மையான நிஜ தாய் மாமன்களும் சினிமாவில் நடித்திருக்கிறார்கள் என்றால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட நடிகர்களின் நிஜ தாய் மாமன்கள் யார்? யார்? என்பது பற்றி விரிவாக இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.
தமிழ் திரை உலகில் நடிக்கும் முன்னணி நடிகர்கள்..
இதில் நாம் முதலாவதாக பார்க்க இருக்கும் நடிகர் ஜெய் இவரின் தாய் மாமன் யார் என்று நீங்கள் யோசிக்கலாம். அவர் வேறு யாரும் இல்லை பிரபல இசை அமைப்பாளர் தேவா தான் இவரின் தாய்மாமன் என்றால் உங்களுக்கு அது ஆச்சரியத்தை ஏற்படுத்தும். ஜெயின் அம்மாவிற்கு அண்ணனாக விளங்கும் தேவா பல பாடல்களுக்கு இசையமைத்து பலரையும் கவர்ந்தவர்.
அடுத்ததாக இந்த லிஸ்டில் இடம் பிடிப்பவர் சீயான் விக்ரம் இவர் நடிப்பில் உலக நாயகனை மிஞ்ச கூடிய வகையில் சிறப்பான நடிப்பை ஒவ்வொரு படத்திலும் வெளிப்படுத்தி தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை வைத்திருப்பவர்.இவரின் சொந்த தாய் மாமன் வேறு யாரும் இல்லை நடிகர் மற்றும் இயக்குனரான தியாகராஜன் தான். இவர் விக்ரமின் அம்மாவிற்கு உடன்பிறந்த சகோதரராக விளங்குகிறார்.
அடுத்ததாக தளபதி விஜயின் தாய்மாமன் பற்றி தெரிந்தால் இவரா என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இவர் வேறு யாரும் இல்லை பிரபல பாடகர் மற்றும் நடிகர் S.N சுரேந்தர். இவர் நடிகர் விஜயின் அம்மாவிற்கு அண்ணனாக விளங்குகிறார்.
மேலும் காமெடி நடிகன் சத்யனின் சொந்த தாய் மாமன் சத்யராஜ் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அதுபோல இசையமைப்பாளர் மற்றும் நடிகராக விளங்கும் ஜிவி பிரகாஷின் தாய் மாமா ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான்.
தெலுங்கு நடிகர்கள்..
இதை அடுத்ததாக நீங்கள் படிக்க இருப்பது தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் இவரது நடிப்பு பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை .இவருக்கு என்று ஒரு இளைஞர் படை தற்போது வரை காத்திருப்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இவருடைய சொந்த தாய் மாமன் தான் சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாண்.
மேலும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவின் தாய் மாமன் யார் தெரியுமா? அவர் வேறு யாரும் இல்லை தெலுங்கில் அதிரடி நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் வெங்கடேஷ் தான்.
அத்தோடு பிரபல தெலுங்கு நடிகரான ராம்சரனின் சொந்த தாய் மாமன் யார் என்றால் பிரபல தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுனின் அப்பா அல்லு அரவிந்த் என்றால் உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும்.
அடுத்ததாக பிரபல திறந்து நடிகரான ஜூனியர் என்டிஆர் இவரின் தாய் மாமா யார் தெரியுமா? ஆந்திராவை அரசியலில் கலக்கி வரும் சந்திரபாபு நாயுடு தான் இவரது சொந்த தாய் மாமன்.
அப்பப்பா இவ்வளவு பிரபல நடிகர்களின் தாய் மாமன்கள் லிஸ்ட்டை பார்த்து நீங்கள் பிரமித்து போய் இருப்பீர்கள் என்று நம்புகிறோம். இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நீங்கள் எப்போதும் தமிழகம் வலைதளத்தோடு இணைந்திருங்கள்.