நீச்சல் உடையில் தொகுப்பாளினி தியா மேனன்..! தீயாய் பரவும் வீடியோ..!

வட இந்தியாவில் இருந்து வந்து  சின்னத்திரையில் பலர் பிரபலமாக இருக்கின்றனர். ஏனெனில் வட இந்திய  தொலைக்காட்சி மார்க்கெட்டில் தமிழ் மார்க்கெட்டை விடவும் அதிகமான போட்டிகள் தொடர்ந்து இருக்கும் காரணத்தினால் அதிகபட்சம் வட இந்தியாவை சேர்ந்த சிலர் தென்னிந்தியாவில்தான் சின்னத்திரையில் முயற்சி செய்து வருகின்றனர்.

ஆனால் சிங்கப்பூரை சேர்ந்தவரான தியா மேனன் தமிழில் பிரபலமான ஒரு தொகுப்பாளினியாக மாறி இருப்பது பெரிய விஷயமாகும். கேரளாவை சேர்ந்த தியா பாதியிலேயே கேரளாவில் இருந்து கிளம்பி சிங்கப்பூரில் சென்று செட்டில் ஆகிவிட்டார்.

அதற்கு பிறகு அவரது குடும்பம் திரும்ப தமிழ்நாட்டை சேர்ந்த கோயம்புத்தூரில் வந்து செட்டில் ஆனார்கள். பிறகு 2015 ஆம் ஆண்டு முதன்முதலாக சூப்பர் சேலஞ்ச் என்கிற நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக அறிமுகமானார் தியா மேனன்.

அதனை தொடர்ந்து அவருக்கு சின்ன துறையில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. சன் மியூசிக்கில் ஒளிபரப்பான கிரேசி கண்மணி, சுட சுட சென்னை, கால் மேல காசு போன்ற நிகழ்ச்சிகளில் தொடர்ந்து தொகுப்பாளினியாக பங்கேற்று வந்தார்.

சிங்கப்பூர் சிட்டிசன்:

அது அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது என்று கூறலாம். இதற்கு நடுவே சிங்கப்பூர் ஸ்டேட் லெவல் டீம் கிரிக்கெட் பிளேயரான கார்த்திக் என்பவரை மூன்று வருடமாக காதலித்து வந்த தியா பிறகு அவரையும் திருமணம் செய்து கொண்டார்.

தற்சமயம் இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது தொகுப்பாளினியாக இருந்து வந்தாலும் கூட சினிமாவின் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார் தியா மேனன். இதனை தொடர்ந்து சினிமாவில் கதாநாயகி ஆவதற்கான முயற்சிகளையும் செய்து வருகிறார்.

ட்ரெண்டிங்கில் வி.ஜே:

ஆனால் இப்பொழுது வரை எந்த ஒரு திரைப்படத்திலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பொதுவாக தொகுப்பாளனிகளுக்கு துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளாவது தமிழ் சினிமாவில் கிடைக்கும்.

ஆனால் இவரை பொறுத்தவரை இவருக்கு அந்த மாதிரி வாய்ப்புகள் கூட இப்பொழுது வரை கிடைக்கவில்லை. இதற்கு நடுவே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றால் கண்டிப்பாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் தொடர்ந்து ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது தொடர்ந்து அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version