அடி உதை போலீஸ்.. கணவர் கொடுமை.. விவாகரத்து.. மூன்று முடிச்சு சீமா பட்ட கஷ்டங்கள்..!

தமிழில் சில நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் அல்லது ஒரு சில சீரியல்களில் நடித்துவிட்டு பிறகு காணாமல் போய்விடுவார்கள். அதற்கு அப்புறம் அவர்கள் என்ன ஆனார்கள் என்பது பலருக்கும் தெரியாமலே இருந்து வரும்.

அதிகபட்சம் சீரியலிலும் சரி சினிமாவிலும் சரி நடிக்கும் நடிகைகள் பெரும்பாலும் தமிழ் நாட்டை சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள். வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அப்படியாக மகாராஷ்டிராவில் இருந்து வந்து தமிழில் மூன்று முடிச்சு என்னும் சீரியலில் முக்கிய நாயகியாக நடித்தவர் நடிகை தீபிகா கர்கர். இவரை மூன்று முடிச்சு சீமா என்று கூறினால் தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும்.

மூன்று முடிச்சு சீமா

இவர் மகாராஷ்டிராவை சேர்ந்த நடிகை ஆவார். 1986இல் மகாராஷ்டிராவில் உள்ள பூனேவில் பிறந்த இவர் தன்னுடைய பள்ளி படிப்புகளை அங்கேயே முடித்தார். அதற்கு பிறகு யுனிவர்சிட்டி ஆப் மும்பையில் படிப்பை முடித்த பிறகு ஜெட் ஏர்வேஸ் என்கிற நிறுவனத்தில் மூன்று வருடங்கள் விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்தார் சீமா.

பொதுவாகவே விமான பணிப்பெண்ணாக பணிபுரிபவர்களுக்கு எளிதாக மாடலிங் துறையில் வாய்ப்புகள் கிடைக்கும். இந்த நிலையில் இவருக்கு 2019 இல் நேரடியாக சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது. 2010 இல் Neer Bhare Tere Naina Devi என்கிற சீரியல் மூலமாக முதன் முதலாக நடிகையாக அறிமுகமானார் சீமா.

கணவர் கொடுமை

அதற்குப் பிறகு அவருக்கு Agle Janam Mohe Bitiya Hi Kijo என்கிற இன்னொரு சீரியலில் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அவர் நடித்த சீரியலில் Sasural Simar Ka சீரியல் தான் அவருக்கு அதிகமான வரவேற்பை பெற்று கொடுத்தது.

கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான இந்த சீரியல் 2011 முதல் 2017 வரை ஒளிபரப்பானது. கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் ஒளிபரப்பான காரணத்தினால் அந்த சீரியல்களுக்கு அதிக அளவில் வெற்றி கிடைத்தது. அதன் மூலமாக நிறைய டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க துவங்கினார் தீபிகா கக்கர்.

2017 ஆம் ஆண்டு ஸ்டார் ப்ளஸ் டிவியில் ஒளிபரப்பான Nach Baliye 8 என்கிற நிகழ்ச்சியில் சோயிப் இப்ராகிம் என்பவருடன் சேர்ந்து கலந்து கொண்டார். சோயிப் இப்ராகிம் முதல் நாடகம் முதலே இவருடன் சேர்ந்து நடித்து வருபவர் ஆவார்.

விவாகரத்து

2018 ஆம் ஆண்டு சீமா பிக் பாஸ் ஹிந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அதன் மூலமாக அதிகமாகவே பிரபலமாகி இருந்தார். இவரது சொந்த வாழ்க்கையை பொறுத்தவரை முதன் முதலில் ராணுக் சாம்சன் என்பவரை தான் திருமணம் செய்து கொண்டார் சீமா.

ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையே ஒத்துவராத காரணத்தினால் 2015ஆம் ஆண்டு அவர்கள் பிரிந்து விட்டனர் நான்கு வருடங்களே அவர்கள் சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த நான்கு வருடங்களில் தொடர்ந்து உடல் ரீதியாக சீமாவை அவரது கணவர் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு முதல் சீரியலில் நடித்த முதலே சோயிப் இப்ராஹிமுடன் இவருக்கு பழக்கம் இருந்து வந்தது அதனை தொடர்ந்து பிறகு இப்ராஹிமையே திருமணம் செய்து கொண்டார் சீமா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version