பாண்டியன் ஸ்டோர்ஸ்.. இதுக்கு என்னை ரொம்ப கலாய்ச்சாங்க.. நடிகை சுஜிதா ஓப்பன் டாக்..!

டிடி பொதிகை சேனலில் இருந்து வரும் காலகட்டத்தில் இருந்து சினிமாவில் தமிழ் சின்ன திரையில் நடிகையாக இருந்து வருபவர் நடிகை சுஜிதா. முதன்முதலாக 1998 இல் வெளியான ஒரு பெண்ணின் கதை என்கிற சீரியல் மூலமாக அறிமுகமானார்.

சிறுவயதிலேயே சீரியலுக்கு வந்துவிட்டதால் வெகு காலங்களாக இவருக்கு வரவேற்பு என்பது இருந்து வருகிறது. தற்சமயம் 41 வயதை அடைந்த நிலையில் எப்பொழுதும் சீரியலில் நடித்து வருகிறார் நடிகை சுஜிதா. ஒரு பெண்ணின் கதை சீரியலுக்கு பிறகு அவர் நடித்த கங்கா யமுனா சரஸ்வதி சீரியல் அதிக வரவேற்பை பெற்றது.

நடிகை சுஜிதா

ராஜ் டிவியில் அந்த சீரியல் ஒளிபரப்பானது. அதற்குப் பிறகு விஜய் டிவியில் உறவுகள் என்கிற சீரியலில் இவர் நடித்தார். தொடர்ந்து இவருக்கு மலையாளத்திலும் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. தாமதமாகதான் 2005 ஆம் ஆண்டு கணவருக்காக என்கிற சீரியல் மூலமாக சன் டிவியில் அறிமுகமானார் சுஜிதா.

சன் டிவியில் அறிமுகமான பிறகு இவருக்கு அதிகமான வரவேற்புகள் கிடைக்க துவங்கின. தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நிறைய சீரியல்களில் நடிக்க தொடங்கினார் சுஜிதா. இதற்கு நடுவே அவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்தது.

சொல்லப்போனால் முதன் முதலில் திரைப்படங்கள் எல்லாம் அறிமுகமானார். 1983 லையே அப்பாஸ் என்கிற ஒரு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகை சுஜிதா. அதற்குப் பிறகு பாக்யராஜ் கதாநாயகனாக நடித்த முந்தானை முடிச்சு திரைப்படத்தில் இவர் குழந்தையாக நடித்திருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்..

இப்படி நிறைய திரைப்படங்களில் குழந்தை கதாபாத்திரமாகவே இவர் நடித்திருக்கிறார். குழந்தை கதாபாத்திரமாக கிட்டத்தட்ட 50 திரைப்படங்களில் நடித்திருக்கிறார் சுஜிதா. அதற்குப் பிறகு அழகன் திரைப்படத்தில் வளர்ந்த பிறகு நடித்தார். திரைப்படத்தில் மம்மூட்டி கதாநாயகனாக நடித்திருந்தார்.

குக் வித் கோமாளி சீசன் 5 முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த போது நடந்த நிகழ்வுகளை குறித்து பகிர்ந்து இருந்தார்.

ரொம்ப கலாய்ச்சாங்க..

அதில் அவர் கூறும்பொழுது, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் பொழுது என்னுடைய அத்தை கதாபாத்திரம் இறந்து போகும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அந்த காட்சியில் நடிக்கும் பொழுது சாதாரணமாக கண்ணீர் விட்டு அழுவது நன்றாக இருக்காது என்று கூறி அனைத்து நடிகர்களையும் அதில் சேர்ந்து நடிக்க வைத்தேன்.

இதனால் அந்த நடிகர்கள் அனைவரும் அதற்கு பிறகு எந்த எமோஷனல் காட்சிகள் படமாக்கப்பட்டாலும் என் பக்கத்தில் மட்டும் வராதே என்று கூறி என்னை கிண்டல் செய்ய தொடங்கினார்கள். பிறகு பாண்டியன் ஸ்டோர் சீரியல் முடியும் வரை தொடர்ந்து அதைக் கூறி என்னை கிண்டல் செய்தனர் என்று கூறியிருக்கிறார் சுஜிதா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version