லலிதாவின் பாட்டுக்கு பாட்டு.. அப்துல் ஹமீதுவின் தற்போதைய மோசமான நிலை..! சோகத்தில் ரசிகர்கள்..!

எப்படி நீயா நானா நிகழ்ச்சி என்றாலே கோபிநாத் எல்லோர் நினைவுக்கும் வருவாரோ அதே போல லலிதாவின் பாட்டுக்கு பாட்டு என்று கூறினாலே பிரபல பேச்சாளரான அப்துல் ஹமீது அவர்கள்தான் நினைவுக்கு வருவார்.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தவர் அப்துல் ஹமீது இலங்கையை சேர்ந்த அப்துல் ஹமீது சிறுவயது முதல் வறுமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இரண்டாம் உலகப்போரில் தனது தந்தையை இழந்த அப்துல் ஹமீது தொடர்ந்து கஷ்டத்திலேயே வளர்ந்து வந்தார்.

சிறுவயது முதலே ஆர்வம்:

பள்ளியில் படிக்கும் காலம் முதலே வசனங்கள் பேசுவதில் அவருக்கு ஆர்வம் இருந்தது. அதனை தொடர்ந்து இலங்கையில் உள்ள வானொலியில் பணியாற்றி வந்தார் அப்துல் ஹமீது. அதன் மூலம்தான் சினிமாவில் வாய்ப்புகளை பெற்று வந்தார்.

இந்த நிலையில் தமிழ் பத்திரிகைகள் பலவற்றில் இவர் பணிபுரிந்து இருக்கிறா.ர் சன் டிவியில் மிகப் பிரபலமான பாட்டுக்கு பாட்டு என்கிற நிகழ்ச்சியில் முக்கிய தொகுப்பாளராக இருந்தவர் அப்துல் ஹமீது.

அப்துல் ஹமீது என்றாலே பெரும்பாலானவர்களுக்கு பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சிதான் நினைவுக்கு வரும். ஒருவர் பாடும் பாடல் எந்த எழுத்தில் முடிகிறதோ அந்த எழுத்தில் இருந்து அடுத்த நபர் பாடலை துவங்க வேண்டும் என்கிற இந்த நிகழ்ச்சியை விளையாடாத 90ஸ் கிட்ஸ் இருக்க முடியாது.

90ஸ்களில் பிரபலம்:

அதேபோல 90 கிட்ஸ் மத்தியில் பிரபலமாக இருந்த நிகழ்ச்சிகளில் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு முக்கியமான நிகழ்ச்சி ஆகும். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அப்துல் ஹமீது உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அவர் இறந்துவிட்டதாகவும் செய்திகள் இணையத்தில் பரவி வந்தன.

இது 90ஸ் கிட்ஸ் பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தும் விஷயமாக இருந்து வந்தது. ஏனெனில் வெகு காலங்களாகவே அப்துல் ஹமீதின் நிலை என்ன என்பது பலருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால் தொலைக்காட்சியை விட்டு விலகிய பிறகும் கூட பத்திரிகைகளில் கவனம் செலுத்திக்கொண்டுதான் இருந்தார் அப்துல் ஹமீது.

அடிக்கடி இவரது கட்டுரைகள் பேட்டிகள் போன்றவை ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டுதான் இருந்தது. இந்த நிலையில் அப்துல் ஹமீது தரப்பிலிருந்து இது முற்றிலும் வதந்தி என்று கூறுகின்றன.

அவர் இலங்கையில் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் இணையத்தில் அவரை குறித்து தவறான செய்திகள் பரவி வருவதாகவும் கூறுகின்றனர் ஏற்கனவே இதற்கு முன்பு மூன்று முறை இப்படி அப்துல் ஹமீது இறந்துவிட்டதாக பொய்யான செய்திகள் வலம் வந்து இருக்கின்றன அதேபோல தற்சமயமும் யாரோ கிளப்பி வரும் வதந்திதான் இது என்று கூறியிருக்கின்றனர் அப்துல் ஹமீது தரப்பினர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version