விஜய்க்கு அபராதம் விதித்து மனுவையும் தள்ளுபடி பண்ணுங்க..! – தமிழக அரசு கிடுக்குபிடி..!

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு வரி செலுத்த தாமதமானதால், விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யக் கோரி நடிகர் விஜய் ( Vijay ) தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என வணிக வரித்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்-5 காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக அரசு வணிக வரித்துறை உத்தரவிட்டது.

இதையும் படிங்க : “சட்டையை கழட்டி விட்டு.. அது தெரிய…” – சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு இறங்கிய கீர்த்தி சுரேஷ்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

இதை எதிர்த்து விஜய் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.‘மாஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து, விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார். இதன் ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியான ‘அரபிக் குத்து’ , சோசியல் மீடியாவில் தொடர் ட்ரெண்டிங்கில் இருந்துவருகிறது.முன்னதாக, நடிகர் விஜய் 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து சொகுசுகாரை இறக்குமதி செய்தார்.

இதையும் படிங்க : “ஷேம்.. ஷேம்.. பப்பி.., ஷேம்..” – பலமான காற்றில் பறந்த பாவாடை – தீயாய் பரவும் ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ..!

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரியாக ரூ.7.98 லட்சம் செலுத்த வேண்டும் என வணிகவரித்துறை தெரிவித்ததுஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் வரியை செலுத்தாத காரணத்தினால், விஜய்க்கு காரின் நுழைவு வரி மற்றும் அபராதத்தொகை இரண்டும் சேர்த்து செலுத்தவேண்டும் என வணிகவரித்துறை உத்தரவிட்டது.

ஆனால், நுழைவுவரி தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால், வரி செலுத்த காலதாமானது என்றும் அபராதத்தொகையை ரத்துசெய்யவேண்டும் என்றும், விஜய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.இந்த நிலையில், நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவேண்டும் என்று தமிழக அரசு பதில்மனு மனுதாக்கல் செய்துள்ளது.

இதே போல் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் அடையார் கேட் ஹோட்டல்களின் இதே போன்ற பிற வழக்குகளும் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குகளின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam