“தமிழ்நாட்டில் காவல் தெய்வங்கள்..!” – ஒரு அலசல்..!

ஊரை காக்கின்ற எல்லை தெய்வங்களாக இருக்கும் காவல் தெய்வங்கள் பற்றி மக்களிடையே இன்றும் ஒரு அபார நம்பிக்கை நிலவி வருகிறது. இந்த நம்பிக்கையானது தொன்று தொட்டு ஏற்பட்டது என்றால் அது மிகையாகாது. கிராமங்களில் கிராம தேவதை வழிபாடு என்பது இன்றும் வழக்கத்தில் இருந்து வரக்கூடிய ஒரு நிகழ்வாகவே உள்ளது.

இந்த கிராம தேவதை வழிபாட்டு முறையை ஆரம்பத்தில் தொடங்கி வைத்தவர் ஆதிசங்கரர் என்று சொல்லலாம். இவர் சிருங்கேரி கிராமத்துக்கு காவல் தெய்வங்களாக கால பைரவர், அனுமான், காளிகாம்பாள் ஆகிய தேவதைகளை பிரதிஷ்டை செய்து அவற்றுக்குரிய வழிபாட்டு நியமங்களை வகுத்துக் கொடுத்தார்.

அதுமட்டுமில்லாமல் இராமாயண காலகட்டத்திலும் அனுமன் இலங்கைக்கு சென்றடைய கூடிய சமயத்தில் இலங்கையின் காவல் தேவதையான லங்கா லக்ஷ்மி அனுமனை தடுத்து நிறுத்தியதாக கதையில் கூறப்பட்டுள்ளது.

எனவே இந்த காவல் தெய்வ வழிபாடு என்பது இன்றல்ல,நேற்றல்ல பன்னெடும் காலத்திற்கு முன்பே தோன்றியது என்பதை இதன் மூலம் நாம் உணர்ந்து கொள்ளலாம். ஒரு கிராமத்தின் எல்லை பகுதியில் கிராம தேவதைகளை வழிபட்டு வர அங்கு சிலைகளை நிறுவி அதற்குரிய வழிபாடுகளை செய்து இருக்கிறார்கள்.

இந்த தெய்வம் கிராமத்துக்குள் நோய்கள், திருடர்கள், பஞ்சம் பெருவெள்ளம் போன்ற இயற்கை மற்றும் செயற்கை பாதிப்புகள் நுழைய விடாதபடி எல்லையிலேயே தடுத்து விரட்டுவதற்கான சக்திகள் பொருந்திய அம்சமாக இருந்ததின் காரணத்தால் தான் கிராம தேவதைகள் எல்லை சாமிகள் என்று அழைக்கப்பட்டார்கள்.

மேலும் இந்த தேவதைகளுக்கு பலி கொடுக்கும் வழக்கம் ஆரம்ப நாட்களிலேயே இருந்து வந்தது. அது மட்டுமல்லாமல் ஊரில் திருவிழா நடக்கும் சமயத்தில் முதலில் இந்த கிராம தேவதைக்கு பூஜை செய்து பலி கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

கிராம தேவதைகளில் முக்கியமாக இருக்கக்கூடிய தெய்வம் வீரபத்திரர். இவர் சிவனின் அம்சமாக கருதப்படுகிறது. இதனை அடுத்து முனீஸ்வரன், சிவ முனி, மகாமுனி, ஜடமுனி, நாதமுனி, தரமுனி போன்ற பல தெய்வங்களை கூறலாம். அதுபோல கருப்புசாமி, கருப்பண்ணசாமி போன்ற தெய்வங்களும் இதில் அடங்கும்.

பெண் தெய்வத்தை பொருத்தவரை மாரியம்மன் கிராம தேவதை வழிபாட்டில் சிறப்பான ஒரு இடம் உண்டு. மழை பொழிவுவதற்காகவும் நோய்களை தீர்ப்பவள் என்பதற்காகவும் மாரியம்மனுக்கு ஒரு மிகப்பெரிய இடத்தை கொடுத்து வைத்திருக்கிறார்கள். ஆகம முறையிலான பூஜைகள் மாரியம்மனுக்கு செய்யப்படும்.

 அதுபோலவே முண்டக்கண்ணி அம்மன், கோலவிழி அம்மன், காளிகாம்பாள் போன்ற பெண் தெய்வங்கள் காவல் தெய்வங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

எனவே என்றும் இந்த கிராம தெய்வங்களுக்கு எல்லை சாமிகளுக்கு வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நம்பிக்கையோடு நீங்களும் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு எண்ணற்ற பயன்களை பெறுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …