“முத்துப்போல் பல் ஜொலிக்க வேண்டுமா..!” – இந்த பார்முலாவை யூஸ் பண்ணுங்க..!

முத்துப்போல் பல் ஜொலிக்க:புதிதாக ஒருவரை சந்திக்கும் போது உங்கள் முதல் புன்னகை உங்களுக்கு ஒரு சிறப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். ஆனால் உங்கள் பற்களில் மஞ்சள் நிற கரையோ, வாய் துர்நாற்றமோ இருந்தால் நிச்சயம் உங்களால் தன்னம்பிக்கையோடு புன்னகை செய்ய முடியாது.

மேலும் நீங்கள் அதிக அளவு புகைப்பிடிப்பது, காப்பி, டீ அருந்துவதால்  கட்டாயம் உங்கள் பற்களில் கரை அதிக அளவில் இருக்கும்.

Teeth

இந்தக் கறைகளை எளிதில் இயற்கை முறையில் நாம் நீக்கிவிடலாம். அப்படி இயற்கை முறையில் எப்படி நீக்கலாம் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் வீட்டு அருகே கொய்யா மரம் இருந்தால் கட்டாயம் கொய்யா இலைகளை பறித்து அதை உங்கள் வாயில் போட்டு நன்றாக மென்று பிறகு துப்பி விடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்வதின் மூலம் உங்கள் பற்களில் இருக்கக்கூடிய மஞ்சள் கரை எளிதில் மறைந்து பல் வெண்மையாக முத்து போல காட்சி தரும்.

Teeth

வெள்ளை வினிகரோடு உப்பை கலந்து உங்கள் பற்களில் தேய்த்து விடுவதின் மூலம் உங்கள் பல்லில் இருக்கும் கரை மறைந்து, வெண்மையாக மாறும். நீங்கள் வினிகர் மற்றும் உப்பை சேர்த்து பல்லில் தேய்த்து விட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் பல்லினை நன்கு கழுவுவது அவசியம் ஆகும்.

இது போலவே எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை அளவு உப்பை லேசாக கலந்து உங்கள் பற்களை தேய்த்து விடுவதின் மூலம் எளிதாக மஞ்சள் கரையை நீக்க முடியும்.

Teeth

நாம் வேண்டாம் என்று தூக்கி எறியக்கூடிய வாழைப்பழ தோலை எடுத்து உங்கள் பற்களில் நன்றாக தேய்த்து விட்டு பிறகு இளம் சுடுநீரில் கழுவுவதின் மூலம் எளிதில் மஞ்சள் கரை நீங்கும்.

மேற்கூறிய குறிப்புகளை பயன்படுத்தி நீங்களும் உங்கள் பற்களை பங்கு போல் மாற்றிவிட முயற்சி செய்யுங்கள். அப்படி உங்கள் பற்கள் வெண்மையாக மாறிவிட்டது என்றால் அதை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …