ரீமேக் ஆகுது ஃபகத் பாசிலின் ஆவேசம்..! ஹீரோ யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..!

மலையாள சினிமாவில் சிறந்த நடிகர்களாக அறியப்படும் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் ஃபகத் பாசில். பெரும்பாலும் பகத் ஃபாசில் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் அதிக வரவேற்பு பெற்ற படங்களாகவே இருந்து வருகின்றன.

என்னதான் ஒரு வாரிசு நடிகர் என்றாலும் கூட ஃபகத் பாசில் தனக்கென ஒரு நடிப்பு திறமையை கொண்டிருப்பவர் ஆவார். ஒவ்வொரு திரைப்படத்திலும் அவருடைய நடிப்பு மேம்பட்டு இருப்பதை பார்க்கலாம். தமிழ் சினிமாவில் கூட ஒரு சில திரைப்படங்களில் நடித்ததன் மூலமாகவே அதிக வரவேற்பை பெற்றார்.

தமிழில் வாய்ப்பு:

விக்ரம் திரைப்படத்தில் அவருக்கு முக்கியமான ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேபோல மாமன்னன் திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் அதிகமாக பேசப்பட்டது. கதாநாயகனின் கதாபாத்திரத்தை தாண்டி அதிகமாக ட்ரெண்டான ஒரு கதாபாத்திரமாக அவரது கதாபாத்திரம் இருந்தது.

இந்த நிலையில் தமிழ் தெலுங்கு மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் தற்சமயம் வரவேற்பு பெற்ற நடிகராக ஃபகத் பாசில் இருந்து வருகிறார். தெலுங்கில் புஷ்பா திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் இவர் தான் நடித்திருக்கிறார்.

மேலும் தற்சமயம் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் திரைப்படத்திலும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் நடித்து வெளியான ஆவேசம் திரைப்படம் அதிக வரவேற்பு பெற்ற திரைப்படமாக இருந்தது.

ரீமேக் ஆகும் படம்:

ஆவேசம் திரைப்படத்தின் கதைக்களத்தை பொருத்தவரை ஒரு மோசமான ரவுடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஃபகத் பாசில். அந்த கதாபாத்திரத்தையும் மிகச் சிறப்பாக செய்திருந்தார். மேலும் 3 கல்லூரி மாணவர்களுடன் இவருக்கு இருக்கும் தொடர்பை வைத்துதான் படத்தின் கதை சொல்லும்.

அந்த கல்லூரி மாணவர்களே பார்த்து பயப்படும் அளவிற்கான ஒரு கதாபாத்திரமாக ஃபகத் பாஸிலின் கதாபாத்திரம் இருந்தது. யாரும் எதிர்பார்க்காத அளவிற்கான வெற்றியை ஆவேசம் திரைப்படம் கொடுத்தது. பாக்ஸ் ஆபிஸில் 100 கோடியை தாண்டி வெற்றி கொடுத்த ஆவேசம் படம் மலையாளத்தில் பெரிதாக பேசப்பட்டது.

ஏனெனில் மலையாள சினிமாவில் அனைத்து திரைப்படங்களும் 100 கோடி ரூபாய் வெற்றியை பெற்று தருவது கிடையாது. இந்த நிலையில் ஆவேசம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் போய்க்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில்தான் தற்சமயம் ஆவேசம் திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யலாம் என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

தெலுங்கு சினிமாவில் அதிக ரசிகர்களைக் கொண்டவரும் முன்னனி நடிகருமான பாலகிருஷ்ணா இந்த படத்தில் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் தெலுங்கில் நிறைய திரைப்படங்களில் ரவுடி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் அவரது இந்த கதாபாத்திரம் தெலுங்கு ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளும்படி இருக்கும் என்றாலும் மலையாள ரசிகர்கள் இதை ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகமே என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version