இளநீர் சூப்

இளநீர் அனைவருக்கும் ஏற்ற உடலுக்கு ஆரோக்கியமான இயற்கை பானம். இந்த இளநீரில் அதிகமாக நாம் உட்கொள்வதின் மூலம் உடல் சூடு தணிந்து உடலுக்குத் தேவையான ஆற்றல் எளிதில் கிடைக்கும்.

அப்படிப்பட்ட மிகவும் சிறப்பு வாய்ந்த இளநீரைக் கொண்டு இளநீரை சூப்பாக தயாரிப்பது எப்படி என்பதை காணலாம் குளிர் காலத்தில் மட்டுமல்ல கோடை காலத்திலும் எடுத்துக்கொள்வதன் மூலம் பல உடல் உபாதைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இளநீரில் உள்ள சத்துக்கள்

சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களான பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், கந்தகம் போன்ற தாதுக்கள் இளநீரில்  உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.

இளநீர் சூப்  செய்ய தேவையான பொருட்களை பார்க்கலாம்

தேவையான பொருட்கள்:

 இளநீர் – 2 கப்

தக்காளிச் சாறு – கால் கப்

இஞ்சிச் சாறு – ஒரு டீஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லி,

மிளகுத்தூள்

உப்பு – சிறிதளவு

 

தாளிக்க:

கடுகு, பெருங்காயத்தூள், சீரகம், வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 2 பல்.

செய்முறை: 

இளநீர், இஞ்சிச் சாறு, தக்காளிச் சாறு, உப்பு சேர்த்து அடுப்பில் ஏற்றி, நுரைத்து வருகையில் தாளிக்கும் பொருட்களைத் தாளித்து சேர்த்து இறக்கவும். மிளகுத்தூள், கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.

இதனை குடிக்க மந்தம், உணவு செரியாமை போன்றவற்றிக்கு இது சிறந்த மருந்து ஆகும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …