“தை பிறந்தால் வழி பிறக்கும்…!! ” – தை மாத சிறப்புக்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாமா..?

தை மாத சிறப்புக்கள்: தை பிறந்தாலே அடுக்கடுக்காக சுப நிகழ்வுகள் தானாக நடக்கும் என்பது போல தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல் மட்டுமல்லாமல் தைப்பூசம், தை அமாவாசை, ரத சப்தமி போன்ற ஆன்மீகம் சார்ந்த விஷயங்கள் அதிக அளவு நடக்கும்.

அதுமட்டுமல்லாமல் இந்த மாதத்தில் பைரவ வழிபாடு, வீரபத்ர வழிபாடு, சாவித்திரி கௌரி விரதம் போன்றவை கடைபிடிக்கப்படும்.

மேலும் மார்கழி மாதக் குளிரை காட்டிலும் தை மாத குளிர் வந்தால் தலையும் நடுங்கும் என்று கூறுவார்கள். அது மட்டுமல்லாமல் தை மாதம் தரையும் குளிரும் வண்ணம் பனி இருக்கும்.

 மற்ற மாதங்களில் நீங்கள் தரையில் புரண்டு படுத்தாலும் உங்களுக்கு எதுவும் ஆகாது. அந்த அளவு குளிமையை நீங்கள் உணர முடியாது. மேலும் தை மாதத்தை மகர மாதம் என்று அழைப்பார்கள்.

 இந்த மாதத்தில் சூரியன் நுழைவதால் தான் நாம் இதை மகர மாதம் என்கிறோம். மேலும் இந்த மாதத்தில் தான் உத்தராயன புண்ணிய காலம் துவங்குகிறது. இதில் உத்தராயணம் என்பது வடக்கு திசையை குறிக்கிறது.

 இதனால் இந்த காலம் எல்லா வகையிலும் சிறப்பானது. தை மாதம் வரும் பௌர்ணமியோடு நான் கொண்டாடும் தைப்பூசம் பற்றி சொல்லவே வேண்டாம். இந்த நாளில் முருகக் கடவுளுக்கு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. மேலும் தைப்பூச தினத்தன்று தான் வேலவனுக்கு சக்தி வேலை பார்வதி வழங்கி இருக்கிறார்.

முதல் மாதமான தை மாத அமாவாசையும், தட்சணாயன காலத்தின் முதல் மாதமான ஆடி மாத அமாவாசையும், புரட்டாசியில் வரும் மாகாளிய அமாவாசையும் முன்னோர்களை வழிபட ஏற்ற அமாவாசை என்று ஜோதிட சாஸ்திரங்கள் மற்றும் வேதங்கள் கூறியுள்ளது.

 மேலும் இந்த தை மாதத்தில் வரும் ஏகாதசி மிகவும் முக்கியத்துவமாக கருதப்படுவதால் அந்த நாளில் விரதம் இருப்பது உடலுக்கு மட்டுமல்ல குடும்பத்திற்கும் நன்மையை தரும்.

 சாவித்திரி கௌரி விரதம் இந்த மாதத்தில் கடைபிடிக்கப்படுகிறது 16 வயது மார்க்கண்டேயருக்கு நீண்ட ஆயுளை பெற சிவபெருமான் அருளிய விரத முறை இது ஆகும்.

 அதுபோலவே தை செவ்வாய் அன்று கால பைரவரை வழிபடுவது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. அது போலவே வீரபத்ர வழிபாடும். செவ்வாய்க்கிழமை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

 இது மட்டுமல்லாமல் அம்மன்களுக்கு உகந்த மாதமாக தை மாதம் விளங்குவதால் அம்மன் சன்னதிகளில் அம்மனுக்கு உரிய பூஜை அபிஷேகங்கள் நடைபெறுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

 எனவே தை மாதத்தின் புண்ணியத்தை உணர்ந்து அந்த மாதத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களை கடைப்பிடித்து தான தர்மங்கள் செய்து வருவதால் முக்தி நிலையை அடைவதற்கு ஏதுவாக இருக்கும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …