Site icon Tamizhakam

தக்காளி.. வேற லெவலு.. தலைவர் 171 வில்லன் யாருன்னு பாருங்க..!

திறமை இருப்பவர்களுக்கு எப்போதும் மார்க்கெட் உண்டு என்பதற்கு உதாரணம்தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

அவர் முதன்முதலில் கடந்த 2016 ஆம் ஆண்டில் மாநகரம் திரைப்படத்தை எடுத்து இயக்குனராக அறிமுகமானார்.

லோகேஷ் கனகராஜ்:

முதல் படத்திலேயே யாருப்பா இந்த இயக்குனர்? என ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவும் திரும்பி பார்த்தது. ஆம் அந்த திரைப்படம் வித்தியாசமான கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்டிருந்ததால்,

புதியதாக ஒரு அனுபவத்தை கொடுத்ததாக பலரும் நல்ல விமர்சனத்தை எழுதினார்கள். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கைதி திரைப்படத்தை கார்த்தி வைத்து எடுத்திருந்தார்.

இதையும் படியுங்கள்:காசுக்காக அதை பண்ணுவியா..? மேசமான கேள்விக்கு பவித்ரா லட்சுமி பதில்..!

இந்த படமும் மாபெரும் அளவில் ரீச் ஆகி மிகப்பெரிய வசூல் சாதனை குவித்தது. தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் பக்கம் ஒட்டுமொத்த தயாரிப்பாளரின் கவனம் திசை திரும்பியது.

அதன் பின்னர் கடந்து 2020 ஆம் ஆண்டு விஜய் மற்றும் விஜய் சேதுபதி வைத்த மாஸ்டர் திரைப்படத்தை இயக்கி மீண்டும் மாபெரும் வெற்றியை குவித்தார்.

அவரின் தொடர் வெற்றிகளைக் கண்டு உலகநாயகன் கமல் ஹாசன் யோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்க அதுவும் மெகா ஹிட் அடித்தது.

கடைசியாக அவர் இரண்டாவது முறையாக மீண்டும் விஜயை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

சூப்பர் ஸ்டாருடன் கூட்டணி:

அந்த படத்தை இயக்கிய கையோடு அடுத்ததாக தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 171 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் டீசர் வருகிற 22ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவ வெளியானதை அடுத்து இதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்: விவாகரத்தான தயாரிப்பாளருடன் திருமணம்.. மேடையில் நடிகை அஞ்சலி கொடுத்த பதிலை பாருங்க..!

இந்த படம் கிட்டத்தட்ட ஹாலிவுட் ரேஞ்சுக்கு படு பயங்கரமாக ஆக்சன் காட்சிகளுடன் அதிரடியான சண்டை காட்சிகளிடனும் எடுக்கப்பட போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

குறிப்பாக The Purge படத்தின் தழுவல் தான் தலைவர் 171 என கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பதை தெரியவில்லை.

தலைவர் 171 வில்லன்:

இந்நிலையில் தற்போது ஒரு சுவாரசியமான தகவல் கிடைத்துள்ளது. என்னவென்று கேட்டீர்கள் ஆனால் தலைவர் 171 படத்தில் ரஜினியுடன் பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர்சிங் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ரன்வீர் சிங் கமிட் ஆகி நடிக்கப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது.

இது ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் மிகுந்த ஆச்சரியத்திலும் எதிர்பார்க்கிலும் ஆழ்த்திள்ளது.

ரன்வீர் சிங் மிகச்சிறந்த நடிகர் என்பதால் இப்படி மட்டும் நடந்தால் சூப்பராக இருக்கும் என்று ரசிகர்கள் தங்களது கருத்தை கூறி வருகிறார்கள்.

Exit mobile version