” தலைக்கு குளித்தாலே தலையில் நீர் கோர்த்தல் பிரச்சனை தான்…!” அடிக்கடி தலையில் நீர் கோர்க்கிறதா இனி கவலை வேண்டாம் இதை செய்தாலே தலை பாரம் நீங்கும்..!!

 வாரத்தில் ஒரு நாள் தலைக்கு  குளித்தால் கூட தலையில் கோர்த்தல் பிரச்சனை தான். நீர் கோர்த்துக் கொண்டு அடிக்கடி தலைவலி தாறு மாறாக ஏற்படுவதோடு பலவிதமான பக்கத்தொல்லைகளால் அவதிப்படக் கூடியவர்களா?

அப்ப இந்த டிப்சை ஃபாலோ செய்தாலே போதும். நீங்கள் மிக எளிதில் குணமடையலாம். மேலும் தலைப்பகுதியில் மண்டையோட்டில் அதிக அளவு நீர் இருப்பதால் தலை பாரமாக இருப்பதோடு தலைவலி, தும்மல் போன்றவற்றை ஏற்படுத்தி உங்களை துன்பத்தில் ஆழ்த்தும்.

 அப்படி நீங்கள் சிரமப்படக்கூடிய சமயத்தில் செய்ய வேண்டியது என்ன எனில் உங்கள் வீட்டு அருகில் இருக்கும் குப்பைமேனி இலை, மிளகு, நொச்சி, வெற்றிலை, சுக்கு இவற்றை சாராக எடுத்து தலையில் நன்கு தேய்த்தால் போதும் உங்கள் தலையில் இருக்கக்கூடிய அந்த தலைபாரம், தும்மல், இருமல் போன்ற பிரச்சனைகள் விரைவில் நிவர்த்தியாகும்.

 தலைக்கு குளித்த பின் தலையை சரியாக துவட்டாமல் அப்படியே விடுவதால் இந்த தலைபாரம் ஏற்படுகிறது. இதை நிவர்த்தி செய்வதற்கு வீட்டில் இருக்கும் சுக்கை எடுத்து மைய பொடி ஆக்கி அதில் சிறிது பசும்பால் கலந்து சூடு செய்து தலை மற்றும் முகம் பகுதிகளில் தேய்த்து விடுவதின் மூலம் தலைபாரம் குறையும்.

 அதுமட்டுமல்லாமல் தலையில் இருக்கக்கூடிய நீரினை உறிஞ்சி எடுக்கக்கூடிய தன்மை இந்த சுக்கு பத்துக்கு உள்ளது.அது போலவே இந்த பிரச்சனை இருப்பவர்கள் கொத்தமல்லியை அரை மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் அரைத்து அதையும் நெற்றிலும் தலையிலும் பற்றுப் போடலாம்.

இது மண்டையை இறுக்கி பிடிக்கக் கூடிய இந்த பற்று மண்டையை சுற்றி இருக்கக்கூடிய நீரினை இழுத்து விடும்.மேலும் மாலை நேரத்தில் இதுபோன்ற பத்துக்களை போட்டு மறுநாள் காலை குளிப்பதன் மூலம் உங்களது கஷ்டம் நிவர்த்தியாகும்.

 மிக விரைவில் உங்களுக்கு குணமாக வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் சாம்பிராணி, பால், கற்பூரம் இது மூன்றையும் ஒன்றாக ஒரு சிறிய வானொலியில் போட்டு அடுப்பில் வைத்து சூடேற்றி இதமான சூட்டில் உங்கள் தலை முழுவதும் சேர்த்து விட வேண்டும். இந்த பத்தினை இரவில் நீங்கள் போட்டுவிட்டு மறுநாள் குளிக்கலாம்.

 மேற்கூறிய பொருட்களை நீங்கள் பத்தாக தடவி வரும் போது மிக விரைவில் உங்கள் மண்டையில் இருக்கும் நீர் வெளியேறி உங்கள் தலை லேசாக மாறி விடுவதை அறியலாம். அது மட்டுமல்லாமல் இதோடு சளி இருந்தாலும் அதை கரைத்து வெளியேற்றக்கூடிய சக்தி இதற்கு உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version