Thalapathy 67 தலைப்பு இது தான்..! – உச்ச கட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Thalapathy 67 : நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள இரண்டாவது திரைப்படமாக தளபதி 67 திரைப்படம் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

பொதுவாக நடிகர் விஜயின் திரைப்படங்களின் படத்தின் தலைப்பு படம் வெளியாகும் சமயத்தில் தான் ரசிகர்களுக்காக வெளியிடப்படும். ஆனால் தற்பொழுது படத்தின் பூஜை முடிந்துள்ள இரண்டு நாட்களில் படத்தின் தலைப்பு வெளியாக இருக்கிறது.

இந்த படத்தின் தலைப்பு நாளை அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்பொழுது இந்த படத்தின் தலைப்பு இதுதான் என்று இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க இருக்கிறது என்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

மேலும் வாரிசு திரைப்படம் கொடுத்த ஏமாற்றத்தை இந்த படத்தை வைத்து ஈடு செய்ய வேண்டும் என்ற முனைப்பில் நடிகர் விஜய் இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

இந்த படத்தில் நடிகை திரிஷா மீண்டும் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மட்டுமில்லாமல் பல்வேறு மொழிகளில் இருந்தும் பல்வேறு நடிகர்கள் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த படத்திற்கு லியோ  ( LEO ) என்று தலைப்படப்பட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கின்றன. படத்தின் அதிகாரப்பூர் தலைப்பு நாளை தான் வெளியாகும் என்று அறிவித்த நிலையில் தற்போது இந்த படத்தின் தலைப்பு இணையத்தில் வெளியாகி இருக்கிறது ரசிகர்களை மகிழ்ச்சியில் இருக்கிறது.

 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version