இது மட்டும் இல்லனா.. மீண்டும் GOAT கூட்டணி தான்.. படத்தை பார்த்து விட்டு விஜய் சொன்னது..!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய்யை கதாநாயகனாக வைத்து கோட் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு தொடர்ந்து அதிக வரவேற்புகள் இருந்து வருகின்றன. ஏனெனில் வெங்கட் பிரபு இதற்கு முன்பு அஜித்தை வைத்து இயக்கிய மங்காத்தா திரைப்படம் பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது.

அந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகும் கூட வெங்கட் பிரபு விஜய் நடிப்பில் பெரிதாக திரைப்படம் எதுவும்  இயக்கவில்லை. இருந்தாலும் வெகு நாட்களாக விஜய்யை வைத்து ஒரு திரைப்படம் இயக்க வேண்டும் என்பது வெங்கட் பிரபுவின் ஆசையாக இருந்தது.

கோட் திரைப்படம்:

அந்த வகையில்தான் சமீபத்தில் கோட் திரைப்படத்தை இயக்க தொடங்கினார் வெங்கட் பிரபு. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற ஒரு படமாக இருந்து வருகிறது. ஏனெனில் இதற்கு முன்பு வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படமும் இதே மாதிரி சயின்ஸ் பிக்சன் கதையை கொண்ட படமாகதான் இருந்தது.

அந்த படம் பெரும் அளவில் வெற்றி கொடுத்து அனைவரையும் அசர வைத்தது. எனவே அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் கோட் திரைபடமும் சயின்ஸ் பிக்ஷன் படமாக இருப்பதால் கண்டிப்பாக இதை இன்னும் சிறப்பாக எடுத்து இருப்பார் வெங்கட் பிரபு என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

இதற்கு நடுவே கோட் திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியான நிலையில் அது கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. ஒரு பக்கம் இளமையான விஜய்க்கு விஜய் குறித்து ஆதரவான விமர்சனங்கள் வந்தாலும் மற்றொரு பக்கம் இதற்கு எதிர்மறையான விமர்சனங்களும் வருகின்றன.

பதில் அளித்த விஜய்:

இது ஒரு பக்கம் விஜய் ரசிகர்களுக்கு கவலையை கொடுத்தாலும் சமீபத்தில் வந்த செய்தி ஒன்று அவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. அதாவது கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் முழு படத்தையும் விஜய் அமர்ந்து பார்த்திருக்கிறார் விஜய்க்கு இந்த திரைப்படம் மிகவும் பிடித்து விட்டதாக கூறப்படுகிறது. அவர் இது குறித்து வெங்கட் பிரபுவிடம் கூறும் பொழுது கலக்கிட்டீங்க வெங்கட் பிரபு.

அவசரப்பட்டு சினிமாவில் ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டேன். இப்படி ஒரு படம் கொடுப்பீங்க என்று தெரிந்திருந்தால் இன்னும் உங்கள் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்திருப்பேன் என்று விஜய் கூறியதாக பட குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தையும் விஜய் பார்த்துவிட்டு சிறப்பாக இருக்கிறது என்று கூறினார். பிறகு அந்த திரைப்படம் எவ்வளவு பெரிய வெற்றியை பெற்றது என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே அதே போல இந்த படத்தையும் புகழ்ந்து இருப்பதால் இதுவும் கண்டிப்பாக பெரிய வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version