தளபதி விஜய் நடிக்கும் படத்தை தல தயாரிக்கிறாரா! – ராசிதான் காரணம் என்று பேசிக்கொள்கிறார்கள்..

தமிழ்நாட்டில் ‘தல’ என்று சொன்னாலே ஒன்று அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்களும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் தோனியும்தான் நம் நினைவிற்கு முதலில் வருபவர்கள்.

உலகக்கோப்பை,டெஸ்ட் தொடர்,ஐபிஎல் போன்ற அனைத்திலும் தனது தனிச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தவிர்க்க முடியாத விளையாட்டு வீரராக திகழும் தல தோனி,கிரிக்கெட்டை தவிர்த்து மற்ற பல்வேறு செயல்பாடுகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

சொந்தமாக கிரிக்கெட் அகாடெமி,பள்ளி போன்றவற்றை நடத்தி வரும் தோனி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். ‘ தோனி என்டர்டயின்மென்ட் லிமிடட்’ என்ற தயாரிப்பு நிறுவனம் பல முன்னணி கதாநாயகர்களை இலக்கு வைத்து படங்களை தயாரிக்க முனைப்பு காட்டி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் தமிழில் தளபதி விஜய் நடிக்கும் படத்தை தல தோனி தயாரிக்க ஆர்வம் காட்டி வருவதாக பரவலாக பேசப்படுகின்றன.தோனியின் தயாரிப்பு நிறுவனத்தில் நடிகர் விஜய்யின் படத்தை தயாரிக்க தோனி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தளபதியை வைத்து படத்தை தயாரிக்க தோனி முனைவதற்கு காரணம் என்னவென்று அனைவரின் மனதில் எழும் கேள்விக்கும் ஒரு செவிவழிச் செய்தி கிடைத்துள்ளது.அதாவது,கிரிக்கெட் வீரர் தோனியின் டிசர்ட்டில் உள்ள அந்த எண்தான் காரணமாம்.

ஆமாங்க!!7 தனக்கு மிகவும் ராசியான எண் என்பதால் நடிகர் விஜய்யின் 70-ஆவது படத்தை தான் தயாரிக்க வேண்டும் என்று தோனி திட்டமிடுவதாக கூறப்படுகிறது.எது எப்படியோ மக்களே! தல தயாரிப்பில் தளபதி படம் ரிலீசான இருவரின் ரசிகர்களும் தியேட்டரில் கொண்டாடப் போவது உறுதி.காத்திருப்போம்!

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …