ஒரு வேளை சோத்துக்கே வழி இல்லாம இருந்தோம்.. நடிகர் தம்பி ராமையாவின் தம்பி வேதனை..!

தமிழ் திரை உலகில் குணசித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும், இருக்கும் தம்பி ராமையா வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தை இயக்கியவர்.

இவரின் ஆரம்ப கால வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை பற்றி மிகவும் சுவாரசியமாக இவரது தம்பி விளக்கி இருக்கிறார். மேலும் இவரது தம்பி ஒரு டிக் டாக் ஸ்பெஷலிஸ்ட். இவர் அண்மை பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்ட விஷயங்களை பற்றி இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.

ஒருவேளை சோற்றுக்கு வழியே இல்லை..

தம்பி ராமையாவின் குடும்பம் ஒரு மிகப்பெரிய குடும்பம் என்று சொல்லலாம். இவரது தம்பி சேதுபதி மற்றொரு தம்பி தங்கை என ஐந்து பேர் மிக அற்புதமான முறையில் பாசத்தோடு வளர்ந்தவர்கள்.

அண்ணன் தம்பி ராமையா சென்னைக்கு சென்றதை அடுத்து இந்த வீட்டில் தான் தற்போது வசித்து வருவதாகவும் ஆரம்ப காலத்தில் இவர்கள் குடும்பம் மிகவும் சிரமப்பட்ட குடும்பம் என்றும் இவர் எருமை மேய்த்த கதைகளையும் பகிர்ந்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் ஒரு வேளை சோத்துக்கே விதி இல்லாமல் இருந்தோம் என்ற  வேதனையான விஷயத்தை வார்த்தைகளால் பகிர்ந்து கொண்ட இவர் இன்று அந்த சோத்தை திங்க முடியாமல் இருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்.

எருமை மாடு மேய்த்து இரண்டு ரூபாய்க்கு பாலை விற்று அதில் கிடைக்கும் காசில் சோளம் வாங்கி சமைத்து சாப்பிட்டதாக சொல்லி இருக்கக்கூடிய அவரது முகத்திலேயே வேதனைகள் அப்படியே தெரிந்தது.

மேலும் பல வருடங்களாக சோளத்தை உணவாக உட்கொண்டு வந்த இவர்கள் அரிசி சோறு என்பதை எப்போதுவதுதான் சாப்பிடுவார்கள் என்ற உண்மையை உடைத்தார்.

நடிகர் தம்பி ராமையா..

தமிழ் திரை உலகில் காமெடியன்களில் முன்னணி வரிசையில் கிடைக்கக்கூடிய தம்பி ராமையா தற்போது ஆக்சன் கிங் அர்ஜுனுக்கு சம்மந்தியாக மாறி இருக்கிறார்.

இவரது மகன் உமாபதி ராமையாவும் ஒரு மிகச்சிறந்த நடிகர் என்பதோடு திரைப்படத்தையும் இயக்கி இருப்பதை அடுத்து விரைவில் அந்த திரைப்படம் திறக்க வெளி வர உள்ள நிலையில் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து அண்மையில் திருமணம் செய்து கொண்டார்.

தம்பி ராமையா ஆரம்ப காலத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்ததை அடுத்து மலபார் போலீஸ் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். இதனை தொடர்ந்து இவருக்கு நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.

தம்பி ராமையாவின் தம்பி வேதனை..

இந்நிலையில் தம்பி ராமையா ஐந்து பேருடன் பிறந்து வளர்ந்து ஒரு காலகட்டத்தில் தொழில் நிமித்தமாக சென்னைக்கு வந்துவிட்ட இவரது பூர்வீக வீட்டில் தற்போது இவரது தம்பி சேனாதிபதி வசித்து வருகிறார்.

இதனை அடுத்து இவருடன் பிறந்த தனது தம்பி சேனாதிபதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. அந்த பெண் குழந்தைகளை தம்பி ராமையா தான் படிக்க வைத்திருப்பதாக அவரும் அவரது மனைவியும் சொல்லியிருக்கிறார்கள்.

மேலும் அந்தப் பெண் பிள்ளைகளின் திருமணத்தை அனைவரும் சேர்ந்து நடத்தி வைத்தார்கள். தனது மூன்று அண்ணன் தம்பிகள் தனக்கு பல்வேறு வகையான உதவிகளை செய்து இருப்பதாக கூறி இருக்கிறார்.

மேலும் ஊரில் நடக்கும் முக்கிய திருவிழாக்களுக்கும் பிள்ளைகளின் விசேஷங்களுக்கும் வந்து செல்லக்கூடிய இவர்கள் தனது தம்பி குடும்பத்திற்கு ஆதரவாக இருந்திருக்கிறார். மேலும் சினிமாவில் எந்த ஒரு நபரையும் தெரியாத போதும் தனது கடுமையான உழைப்பால் எந்த அளவு முன்னேறி இருக்கிறார்.

அத்துடன் ஒரு வேளை சோற்றுக்கே விடியில்லாமல் இருந்தோம் என்று தம்பி ராமையாவின் தம்பி வேதனையோடு பகிர்ந்த விஷயங்கள் அனைத்தும் இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version