“சிங்கிள் பசங்க சாபம் சும்மா விடாது…” – தாமிரபரணி பானு ரொமான்ஸ் புகைப்படங்கள்..! – புலம்பும் ரசிகர்கள்..!

நடிகை தாமிரபரணி பானு ( Thamirabarani Banu ) இவருடைய இயற்பெயர் முக்தா பானு ( Muktha Banu ) ஆகும். தமிழில் விஷால் நடித்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தாமிரபரணி. இப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.

இப்படம் அவருக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்று தந்தது. இதனைத்தொடர்ந்து அவர் ரசிகர்மன்றம், அழகர்மலை, சட்டப்படி குற்றம், மூன்று பேர் மூன்று காதல், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, வாய்மை, பாம்பு சட்டை போன்ற அடுத்தடுத்த படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

Read Also : நமீதாவை ஓரம் கட்டிய பழைய நடிகை ராதா – இணையத்தில் வெளியான புகைப்படங்கள்..!

தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் இவர் 2005ஆம் ஆண்டு வெளிவந்த ஓட்ட நாணயம் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலமாகவே சினிமா உலகில் அறிமுகம் ஆனார் என்பது குறிபிடத்தக்கது. மலையாளத்தில் இவர் பல படங்களில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சின்னத்திரையிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.முக்தா அவர்கள் 2015 ஆம் ஆண்டு ரிங்கு டாமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் இவர்களுக்கு கியாரா என்ற மகள் உள்ளார்.

Read Also : நீச்சல் உடையில் படு சூடான போஸ் – இணையத்தை கலக்கும் 90ஸ் கனவுக்கன்னி சங்கவி..!

தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள முக்தா அவரது செல்ல குழந்தையுடன் பொழுதை கழித்து வருகிறார். அந்தவகையில் தற்போது, தன்னுடைய கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் சிங்கிள் பசங்க சாபம் சும்மா விடாது.. என்று புலம்பி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *