தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மறுத்த ஐஸ்வர்யா ராய்.. அடுத்த நாளே பழி வாங்கிய இயக்குனர்..

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய் பற்றி உங்களுக்கு மிகச் சிறப்பாக தெரியும். தற்போது தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து விரைவில் முழு நேர அரசியலில் களம் இறங்க விஜய் தயார் ஆகிவிட்டார்.

இதையும் படிங்க: நயன்தாரா விட்ட சாபம் தான்.. விடாமுயற்சி Drop ஆனதுக்கு காரணம்.. விளாசும் பிரபலம்..!

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் விஜய் கண்டிப்பாக மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்வார் என்று காத்திருப்பதோடு மட்டுமல்லாமல் அவரது சினிமா உலகிற்கு பை, பை சொல்லுவதை நினைத்து சற்று சங்கடத்தில் ஆழ்ந்து உள்ளார்கள்.

தளபதி விஜய்..

தற்போது தளபதி விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளி வர இருக்கும் கோட் திரைப்படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த படத்தில் பல முக்கிய பிரபலங்கள் நடிக்க படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த வண்ணம் உள்ளது.

இதனை அடுத்து தளபதி 69 படத்தில் நடிக்க கூடிய தளபதி விஜய் 2026 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடிப்பில் இருந்து விலகி மக்கள் சேவை செய்ய இருக்கிறார். இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி படமாக பேசப்படவில்லை என்றாலும் கூட கதை மற்றும் திரைக்கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

விஜய்க்கு ஜோடியாக நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய்..

இன்று கூட இந்த படத்திற்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதில் நடிகர் விஜய் வழக்கறிஞராக நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்தில் ஹீரோயினியாக யாரை நடிக்க ஒப்பந்தம் செய்யலாம் என நடிகர் விஜயிடம் இயக்குனர் கேட்டிருக்கிறார்.

இதனை அடுத்து விஜய் எனக்கு எதுவும் கருத்து இல்லை. இந்த கதைக்கு யார் பொருத்தமாக இருப்பார் என்று நினைக்கிறீர்களோ அவர்களை நீங்கள் ஹீரோயினியாக ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள் என கூறி இருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய் கூறியதை அடுத்து உலகநாயகி ஐஸ்வர்யா ராய் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்குமாறு இயக்குனர் மஜித் கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு ஐஸ்வர்யா ராய் விஜய்க்கு ஜோடியாக நடிக்க முடியாது என மறுத்துவிட்டார்.

இந்நிலையில் இயக்குனர் ஐஸ்வர்யா ராயிடம் அது எப்படி என்னுடைய படத்தில் அதுவும் விஜய்க்கு ஜோடியாக நீங்கள் நடிக்க மறுக்கிறீர்கள் என கடுப்பாகிவிட்டார்.

பழிவாங்கிய இயக்குனர்..

கடுப்பான இயக்குனர் அந்த நேரத்தில் மற்றொரு உலக அழகியாக இருந்த பிரியங்கா சோப்ராவின் மார்க்கெட் சூடு பிடித்துக் கொண்டிருக்க கூடிய வேளையில் ஐஸ்வர்யா ராய்க்கு பதிலாக பிரியங்கா சோப்ரா என்றெல்லாம் பத்திரிகைகள் எழுதி வந்த வேளையில் பிரியங்கா சோப்ராவிற்கு பல படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இதனால் பிரியங்கா சோப்ராவின் மீது நடிகை ஐஸ்வர்யா ராய் புகைச்சலில் இருந்த சமயத்தில் அவரை பழி வாங்கும் விதமாக நடிகை பிரியங்கா சோப்ராவை தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக்கினார்.

ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை நடிகர் விஜய் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ராவின் தமிழன் படமே முதலும் கடைசியும் படமாக அவருக்கு அமைந்துவிட்டது. இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

இதையும் படிங்க: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

மேலும் ரசிகர்கள் அனைவரும் தளபதி விஜய் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய் அடுத்த நாளே பழி வாங்கிய இயக்குனர் பற்றிய விஷயத்தை நண்பர்களோடு பகிர்ந்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version