பா.ரஞ்சித் அவர்கள் இயக்கும் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்களின் மத்தியில் ஒரு விதமான எல்லை மீறிய அளவு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளி வந்துள்ள தங்கலான் திரைப்படத்தைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன் இணைந்து கே.இ ஞானவேல் ராஜா தயாரித்து இருக்க படத்தில் விக்ரம் மற்றும் பசுபதி அசத்தலான ரோலில் நடித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
தங்கலான் திரைப்படம்..
ரசிகர்களின் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் தங்கலான் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் யார் என்று உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.
ஏற்கனவே சீயான் விக்ரம் படம் பட்டையை கிளப்பி வரக்கூடிய நிலையில் பசுபதியும் உடன் இணைந்த இருப்பது சரவெடியாய் ரசிகர்களின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த படத்தில் பார்வதி மேனன், மாளவிகா மோகனன், டேனியல், ஹரி கிருஷ்ணன், அன்புதுரை போன்ற பல நடிகர்கள் நடித்துள்ள நிலையில் சியான் 61 என்ற தலைப்பில் டிசம்பர் 2021 ஆம் தேதி என்ற படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து இந்த படத்தின் பெயரானது டிசம்பர் 21-ஆம் தேதி தங்கலான் என்று அதிகாரப்பூர்வமாக சொல்லப்பட்ட நிலையில் படத்தின் இசையை ஜிவி பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு ஏ கிஷோர் குமார், படத்தொகுப்பு செல்வா என பல முக்கிய நபர்கள் இந்த படத்தில் பங்கு பெற்று இருக்கிறார்கள்.
முதல் நாள் ப்ரீ புக்கிங் கலெக்ஷன்..
ஏற்கனவே இந்த படம் பற்றி பல்வேறு செய்திகள் இணையங்களில் வெளிவந்துள்ள நிலையில் இப்படத்தின் தமிழக உரிமை ரூபாய் 25 கோடிக்கு விற்பனை ஆகி உள்ள தகவல்களும் இந்த படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளது என்று சொல்லலாம்.
அதுமட்டுமல்லாமல் 78 ஆவது சுதந்திர தினத்தன்று உலக அளவில் வெளி வந்திருக்கும் தங்கலான் திரைப்படத்தின் முதல் நாள் பிரீ புக்கிங் வசூல் பற்றி தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் இந்த திரைப்படம் எவ்வளவு வசூலை உலக அளவில் இந்த நாளில் செய்திருக்கும் என்ற செய்தியை நீங்கள் கேட்டால் மலைத்துப் போவீர்கள்.
எவ்வளவு தெரியுமா?
ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பில் வெடிவந்திருக்கும் இந்த திரைப்படமானது தனது முதல் நாள் பிரீ புக்கிங் வசூரில் சுமார் ஏழு கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.
இதனை அடுத்து முதல் நாளே உலக அளவில் இவ்வளவு பெரிய தொகையை வசூல் செய்திருக்கும் படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்புகள் அதிகரித்து இருப்பதால் வரும் நாட்களில் இந்த படத்தை பார்க்க அதிக அளவு மக்கள் வருவார்கள் என்று நம்பப்படுவதோடு இன்னும் வசூலை வாரி கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
விக்ரம் மற்றும் பசுபதியின் காமினேஷன் மட்டுமல்லாமல் பா ரஞ்சித்தின் கைவண்ணத்தில் இந்த வரலாற்று காவியம் ரசிகர்களின் மனதில் இடம் பெறக்கூடிய வகையில் இருக்கும் என நம்பலாம்.
அட இன்று சுதந்திர தினத்தன்று நீங்கள் எங்கே கிளம்பி விட்டீர்கள் என்று யாரும் கேட்க மாட்டார்கள் கட்டாயம் நீங்கள் தங்களால் திரைப்படம் பார்ப்பர் திரையரங்குகளை நோக்கி செல்வீர்கள் என்பது எங்களது கணிப்பாக உள்ளது.
நீங்கள் திரைப்படம் பார்த்து விட்டால் அந்த படம் குறித்து உங்களுடைய கருத்துக்களை கமெண்ட் செக்ஷனில் பதிவிடுவதின் மூலம் வரும் நாட்களில் இந்த படம் குறித்து மேலும் பல தகவல்களை நாம் அறிந்து கொள்ளலாம்.