பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் இந்திய விடுதலை நாளான கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் தங்கலான் .
இந்த திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன், பார்வதி மேனன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள் .
தங்கலான்:
இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க கே இ ஞானவேல் ராஜா படத்தை தயாரித்திருந்தார்.
பீரியாடிக் ஃபிலிம் கதைகளத்தில் வெளிவந்திருந்த இந்த திரைப்படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு இருந்தார்கள்.
காரணம் விக்ரமின் தோற்றம் மற்றும் அவரின் ரோலுக்காகவே இந்த படத்தை பார்த்தாக வேண்டும்… பா ரஞ்சித் சம்பவத்தை சிறப்பாக செய்திருப்பார் என்றெல்லாம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள் படத்தை பார்க்க சென்றனர் .
ஆனால், படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதே பெருவாரியான ரசிகர்களின் கலவையான விமர்சனமாக இருந்து வருகிறது .
இந்த நிலையில் படத்திற்கு விமர்சனம் செய்துள்ள பிரபலமான விமர்சகர் ஆன ப்ளூ சட்டை மாறன் படத்தை பங்கமாக கலாய்த்து பிரித்து மேய்ந்திருக்கிறார் .
இந்த விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது… வலியும் வேதனையும் தான் படமா சொல்லப்போகிறார் என்று போய் தியேட்டர்ல உக்காந்தா படம் வேற மாதிரி காட்டி இருக்காரு .
மீண்டும் சாதியை உள்ளே நுழைத்து கெடுத்துவிட்டார் ரஞ்சித்:
ரத்த சரித்திரத்தை படமா எடுக்கிறேன் என்று வேலையை ஆரம்பிச்ச பா ரஞ்சித் நான் பெரிய எவ்வளவு பெரிய அறிவாளி என்பதை காட்டுறேன் பாருங்க என்ற தொனியில் படத்தை எடுத்து முடித்திருக்கிறார்.
கோலார் தங்கவயல் என்ற ரத்த சரித்திரத்தை படமா எடுக்காமல் வருணாசிரமம், சிறு தெய்வ வழிபாடு, பெருமாள், ராமானுஜம், கிறிஸ்தவ மதம், முஸ்லிம் மதத்தில் இருந்து திப்புசுல்தான் ஆகியோரே மொத்தமாக இழுத்துக் கொண்டு போய் தன்னுடைய சாதி மதம் குறித்து கருத்து பேசுறாரு.
அரசியல் நிலைப்பாட்டை நேரடியா அழுத்தம் திருத்தமா சொல்லாமல் வழக்கம் போல ஈரம் பூசி உருட்டி வச்சிருக்காரு பா ரஞ்சித்.
கதைய சொதப்பினதோடு விட்டுவிடாமல் விஷுவல் பரதேசி ஆயிரத்தில் ஒருவன் படங்களை அப்படியே காப்பி அடிச்சு வச்சிருக்காங்க.
ஒரு படம் ஒருவருக்கு பிடிக்கும் ஒருவருக்கு பிடிக்காது. ஆனால் ஒரு படம் புரியவே இல்லை என்றால் அது யாருடைய தவறு?
தங்கலான் படம் பாத்தா தொங்கலான்னு தோணுது…
வசனம் புரியல… கதை புரியல… என்று பார்த்தவர்கள் சொல்கிறார்கள். இது பீரியாடிக் ஃபிரம் என்பதால் அதற்கான வேலை சரியாக செய்யவில்லை.
குடியிருப்பு பகுதியின்னு ஒன்னு காட்டுறாங்க அது செயற்கையான செட் அப்படின்னு அப்பட்டமா தெரியுது. காஸ்டியூம் சுத்தமா நல்லாவே இல்ல… வி எஃப் எக்ஸ் வேலை சொல்லும் படியா இல்ல.
ஆரம்பத்தில் படம் நல்லா இருக்கு ஆனால் போக போக படத்தோட படத்தோட கனெக்ட் ஆகவே முடியல. விக்ரம், பார்வதி , மாளவிகா இவங்களோட நடிப்பு பிரம்மாதம்.
ஒளிப்பதிவு அருமை ஜிவி பிரகாஷ் படத்த ஒரு அளவுக்கு காப்பாற்ற முயற்சிக்கிறார். சரியில்லாத கதையும் வலுவில்லாத திரைக்கதையும் தான் படைத்த ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுத்துகிட்டே போகுது
எல்லாத்தையும் விட படம் முடியும்போது பார்ட் 2 அப்படின்னு லீட் கொடுத்து முடிக்கிறாங்க… அதை பார்த்ததும் தூக்கி வாரி போட்டுடுச்சு.
மொத்தத்துல “தங்கலான் படத்தை பார்த்தால் தொங்கலாம்னு தோனிடும்” என்று ப்ளூ சட்டை மாடல் மிகவும் மோசமாக விமர்சித்து கலாய்த்து தள்ளி இருக்கிறார்.
ஆண்டி-இண்டியன் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராகவும் அறியப்படுகிறார் ப்ளூ சட்டை மாறன் என்பது குறிப்பிடதக்கது.