கோபப்பட்ட சியான் விக்ரம்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்.. தங்கலான் டிக்கெட் புக்கிங் நிலைமை இது தான்..!

தமிழ் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்படுத்தி வரும் வரை திரைப்படமாக தங்கலான் திரைப்படம் இருந்து வருகிறது. இதில் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்தின் அதிக எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

தங்கலான் திரைப்படம் முழுக்க முழுக்க பழங்குடியின மக்களை அடிப்படையாகக் கொண்ட கதையாக இருக்கிறது. இதில் பழங்குடியின ஆடையிலேயே அனைவரும் நடித்திருப்பதே படத்தில் கூடுதல் சிறப்பாக இருக்கிறது.

தங்கலான்

படத்தின் டீசர் டிரைலர் போன்ற விஷயங்கள் வெளியானது முதலே இந்த திரைப்படம் குறித்து வரவேற்பு என்பது மிக அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.

இந்த படத்திற்கு போட்டியாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் டிமான்டி காலனி 2 திரைப்படமும் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இதற்கு நடுவே நடிகை கீர்த்தி சுரேஷ் சர்ச்சையான கதைக்களத்தில் நடித்திருக்கும் ரகு தாத்தா திரைப்படமும் நாளை வெளியாகிறது.

சியான் விக்ரம்

இந்த திரைப்படத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக பேசியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்த மூன்று திரைப்படங்களுமே ஒரு வகையில் முக்கியமான திரைப்படங்களாக தான் இருக்கிறது. நாளை 3 திரைப்படங்களுக்கும் இடையே சரியான போட்டிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதில் தங்கலான் பெரிதாக வெற்றி பெறுமா என்பது ஒரு பக்கம் கேள்வியும் இருந்து வருகிறது. ஒரு பக்கம் தங்கலான் வெற்றி பெறாது என்றும் பேச்சுக்கள் இருந்து வருகிறது. இதற்கு நடுவே தமிழில் டாப் நடிகர்கள் அளவிற்கு செல்வாக்கு இல்லாதது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று விக்ரமிடம் பேட்டியில் கேட்கப்பட்டது.

டிக்கெட் புக்கிங்

அதற்கு கோபமடைந்த விக்ரம் முதல் நாள் என்னுடைய படத்திற்கு வரும் ரசிகர்கள் கூட்டத்தை பாருங்கள் அதை வைத்து எனக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று தெரியும் என்று கூறி இருந்தார். அதேபோல தற்சமயம் புக் மை ஷோவில் நாளை வெளியாக உள்ள தங்கலான் திரைப்படத்திற்கு முக்கால்வாசி டிக்கெட் புக்கிங் ஆகி உள்ளது.

கண்டிப்பாக தங்கலான் திரைப்படம் வெளியாகும் மற்ற திரைப்படங்களை விட அதிக வசூலை கொடுக்கும் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. ஆனால் ரெட் ஜெயண்ட் நிறுவனம் பொதுவாக நிறைய திரையரங்குகளை கையில் வைத்திருக்கிறார்.

டிமான்டி காலனி 2 திரைப்படத்தை இவர்கள் அதிக திரையரங்குகளுக்கு மாற்றிவிடவும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் பா. ரஞ்சத்திற்கும் திமுகவிற்கும் இடையே அரசியல் ரீதியாக பிரச்சனைகள் இருப்பதால் அந்த மோதல் இந்த திரைப்படங்களுக்குள் வந்துவிடக்கூடாது என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam