அட இது நம்ம சீயான் விக்ரம் – மா? அடையாளமே தெரியலையே… இப்படி ஒரு கெட்டப்பா…!!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களின் வரிசையில் இருப்பவர்தான் நடிகர் விக்ரம். இவர் ஆரம்ப நாட்களில் படங்களில் நடிக்கும் போது கிடைக்காத பெயரும் புகழும் நாள் செல்லச் செல்ல இவருக்கு கிடைத்தது. அந்த வரிசையில் இவர் நடிப்பில் தற்போது வெளிவந்த பொன்னியின் செல்வன், கோப்ரா ஆகிய படங்களை கூறலாம்.

 இதில் கோப்ரா படம் போதுமான அளவு வசூலையோ வர்த்தக ரீதியில் விமர்சனங்களையோ இவருக்கு பெற்று தரவில்லை. எனினும் பொன்னியின் செல்வன் படம் மாபெரும் வெற்றியும் வர்த்தக ரீதியான வசூலையும் தந்தது.

 பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாய் அவதாரம் எடுத்திருந்த இவரின் நடிப்பு சொல்லிக் கொள்ளும் படியாக இருந்தது. மேலும் நடிப்பில் ஒவ்வொன்றையும் செதுக்கி இருக்கிறாரா? என்று கேட்கத் தூண்டக்கூடிய வகையில் இவரது நடிப்பு படு எதார்த்தமாக பக்காவாக இருந்தது.

 இதனை அடுத்து இவர் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் யாரும் எதிர்பார்க்காத வித்தியாசமான கெட்டப்பில் தான் தற்போது நடிகர் விக்ரம் காட்சி அளிக்கிறார்.

அதனைப் பார்த்து பலரும் அட இது நம்ம விக்கிரமா? கெட்டப் வித்தியாசமா இருக்கே என்று கேட்கக்கூடிய நிலை அண்மையில் வெளிவந்த தங்கலான் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து எதிர்பார்ப்பை தூண்டி இருக்கும் இந்தப் புகைப்படம் எப்போது திரைக்கு வெளிவரும் என்பது போன்ற பலவிதமான கேள்விகளையும், இந்த படத்துக்கான கதையம்சம் எப்படி இருக்கும் என்பதை ரசிகர்கள் தற்போது ஆர்வமாக கேட்டு வருகிறார்கள்.

ஏற்கனவே பா ரஞ்சித்தின் படத்தில் வித்தியாசமான கதையம்சம் இருப்பதோடு மட்டுமல்லாமல் சமுதாயத்திற்கு தேவையான கருத்துக்களையும் மிக தைரியமான முறையில் வெளியிடப்பட்டு இருப்பார்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் எத்தகைய கருத்துக்களை சமுதாயத்துக்காக முன் வைத்திருக்கிறார் என்பது படம் வெளிவந்த பிறகு தான் தெரியவரும் என்று தெரிகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …