#தரம்கெட்ட_AGS உலக அளவில் ட்ரெண்ட் செய்த அஜித் ரசிகர்கள்..! ஒரு தயாரிப்பு நிறுவனம் செய்யும் வேலையா இது..?

#தரம்கெட்ட_AGS : ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வசூலில் சாதனை படித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் செய்துள்ள ஒரு செயல் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. இதன் காரணமாக #தரம்கெட்ட_AGS என்ற ஹேஸ்டேக்கை உலக அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

இது எதேச்சையாக நடந்ததா? அல்லது திட்டமிட்டு செய்யப்பட்டதா..? என்பது குறித்த விபரங்கள் சில மணி நேரங்களில் தெரியவரும்.

என்ன நடந்தது..? என்று பார்க்கலாம். நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த திரைப்படத்தின் வசூல் விபரங்கள் மற்றும் படம் குறித்த பாசிட்டிவான மீம்கள் மற்றும் ட்விட்டர் பதிவுகளை தன்னுடைய பக்கத்தில் ரீபோஸ்ட் செய்து வந்தது தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ்.

பொதுவாக எல்லா தயாரிப்பு நிறுவனங்களும் செய்யக்கூடிய வேலை தான் இது. என்றாலும் கூட, மோசமான ஒரு பதிவை ரீபோஸ்ட் செய்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறது ஏஜிஎஸ் நிறுவனம்.

ரசிகர் ஒருவர் பயில்வான் ரங்கநாதன் கோட் படத்திற்கு கொடுத்த விமர்சனத்தை தன்னுடைய பக்கத்தில் பதிவு செய்து நடிகர் அஜித்தை சீண்டும் விதமாக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி ட்வீட் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

இந்த பதிவை தான் ஏஜிஎஸ் நிறுவனம் ரிப்போஸ்ட் செய்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. படத்தில் நடிகர் அஜித்தின் ரெஃபரன்ஸை வைத்துக்கொண்டு.. தற்போது அஜித்திற்கு எதிரான மோசமான கருத்து கொண்ட ஒரு ட்வீட்டை தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருப்பது எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்..?

ஏஜிஎஸ் நிறுவனம் தவறான இடத்தில் மோதி விட்டது. இதற்கான பதிலை ஏஜிஎஸ் நிறுவனம் கொடுத்தே ஆக வேண்டும் என்று #தரம்கெட்ட_AGS என்ற தலைப்பில் உலக அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

படம் வெளியாகி இரண்டு நாட்களே ஆகியிருக்கும் நிலையில் இப்படியான ஒரு சர்ச்சை அவசியமா..? நடிகர் விஜய் அரசியல் கட்சி வேறு தொடங்கியிருக்கும் நிலையில்.. அவருடைய பெயரை டேமேஜ் ஆக்கும் விதமாக அவருடைய படத்தின் தயாரிப்பு நிறுவனமே இப்படி செய்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

இது வேண்டுமென்று தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியதா…? அல்லது எதேர்சையாக நடைபெற்றதா என்ற விவரங்களை தொடர்ந்து நம்முடைய தளத்தில் பார்க்கலாம் இணைந்து இருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam