மச்சக்கன்னி ஒத்துகிச்சு பாடல் படப்பிடிப்பில் நடந்த கொடுமை.. நமீதா பகிர்ந்த ரகசியம்..!

கவர்ச்சி நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களை மச்சான் என்று அழைத்து அவர்களை சொக்கி இழுத்தவர் தான் நடிகை நமீதா.

90ஸ் காலகட்டத்தின் ஆரம்பத்தில் நடிக்க வந்த இவர் 20ஸ் காலகட்டத்தில் புகழ்பெற்ற நடிகையாகவும் பிரபலமான நடிகையாகவும் வலம் பெற தொடங்கினார்.

நடிகை நமீதா:

குறிப்பாக இவரது கவர்ச்சி அழகை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் தியேட்டருக்கு படை எடுத்தார்கள்.

அந்த அளவுக்கு நல்ல அழகான தோற்றம் கொழுக் மொழுக் லுக்கில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தார் நமிதா.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து பெரும் புகழ்பெற்றவராக பார்க்கப்பட்டு வந்தார்.

திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த முதலில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் பெருகிவிட்டார்கள் இதனால் அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் தொடர்ச்சியாக கிடைத்துக் கொண்டே இருந்தது.

2002 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் திரைப்படமான சொந்தம் என்ற திரைப்படத்தில் நடித்து தெலுங்கு சினிமாவில் முதன் முதலில் நடிகையாக அறிமுகம் ஆனார்.

அதன் பிறகு தமிழ் உள்ளிட்ட மொழிகளின் நடிக்க தொடங்கினார். இவர் மிஸ் இந்தியா 2001 ஆம் ஆண்டு போட்டியில் பங்கேற்றதன் மூலமாக திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்க தொடங்கியது.

கவர்ச்சி கன்னியாக நடிகை நமீதா:

குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்த நடிகை நமிதா மிஸ் இந்தியா போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தார். அதன் பிறகு தமிழ் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க எங்கள் அண்ணா படத்தில் நடித்து அறிமுகமானார்.

2000 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் கவர்ச்சி அள்ளி தெளித்து வந்த நமீதாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூடினார்கள்.

ஜெமினி, எங்கள் அண்ணா, பம்பரக் கண்ணாலே, இங்கிலீஷ் காரன்,பச்சை குதிரை, வியாபாரி, நான் அவனில்லை ,அழகிய தமிழ் மகன் ,பில்லா, ஜெகன் மோகினி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடிகை நமிதா நடித்திருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி பங்கேற்று மிகவும் பிரபலமானவராக பார்க்கப்பட்டார் .

தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க திரைப்படங்களில் நடித்து வந்த அவருக்கு பின்னர் இவரது கவர்ச்சி மார்க்கெட் குறைந்து போக அதன் பிறகு புது நடிகைகளின் வரவால் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

இதனால் திரைப்படங்களில் அவ்வப்போது மட்டுமே தென்பட்டு வந்தார் . இதனிடையே 2017 ஆம் ஆண்டு விரேந்திர சவுத்ரி என்ற தனது காதலரை திருமணம் செய்து கொண்ட நடிகை நமீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர்.

ஷூட்டிங்கில் சுருண்டு விழுந்த நமீதா:

தொடர்ச்சியாக அவ்வப்போது கிடைக்கும் திரைப்பட வாய்ப்புகளில் மட்டும் நடித்து வரும் நடிகை நமீதா.

சமீபத்திய பேட்டி ஒன்றில் நான் அவன் இல்லை படத்தில் இடம்பெற்ற மச்சக்கன்னி ஒத்துகிச்சு பாடல் படப்பிடிப்பு துபாயில் உள்ள பாலைவனம் ஒன்றில் படமாக்கப்பட்டது .

அந்த படப்பிடிப்பின் இரண்டாவது நாள் அதிக வெப்பம் காரணமாக எனக்கு மயக்கம் வந்து விட்டது. என்னால் அந்த வெப்பத்தை தாங்கவே முடியவில்லை.

யாரும் எதிர்பாக்காத நேரத்தில் நானே எதிர்பாக்காத நேரத்தில் பொத்தென மயங்கி விழுந்தேன். ஒட்டுமொத்த படக்குழுவும் பதறிப்போனது.

அன்று அரை நாள் நான் மயக்கம் தெளியும் வரை எந்த ஒரு படப்பிடிப்பும் நடக்கவில்லை. ஆனால், அதனை பாடலாக நீங்கள் வீடியோவில் பார்க்கும் போது எதுவுமே உங்களுக்கு தெரியாது.

ஆனால் அவ்வளவு வெப்பத்தை தாங்கிக் கொண்டு அந்த படப்பிடிப்பு தளத்தில் இந்த காட்சிகளை படமாக்கினோம் என ரகசியம் உடைத்து இருக்கிறார் நடிகை நமீதா.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version