அத்து மீறி டார்ச்சர் செய்த நடிகர்..! கதி கலங்கிய காஜல் அகர்வால்..!

மும்பை மகாராஷ்டிரா பகுதியை பூர்வீகமாகக் கொண்ட நடிகை காஜல் அகர்வால் இந்தி ,தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார்.

முதன் முதலில் தமிழ் சினிமாவில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த பழனி திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

நடிகை காஜல் அகர்வால்:

ஆனால், அந்த திரைப்படம் அவருக்கு பெரும் அடையாளத்தை கொடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சி கைவிடாமல் அடுத்தடுத்து வாய்ப்புகளை தேட ஆரம்பித்தார் நடிகை காஜல் அகர்வால்.

நான் மகான் அல்ல திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து தமிழில் அவர் நடித்த சிங்கம், மாற்றான் ,ஆல் இன் ஆல் அழகுராஜா, மாரி 2, கவலை வேண்டாம் ,விவேகம், மெர்சல் எப்படி தொடர்ச்சியாக தனுஷ், விஜ,ய் அஜித் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.

நடிகை காஜல் அகர்வால் தொடர்ந்து தற்போது அவர் இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் காஜல் அகர்வாலின் நடிப்பு ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும் என அவரே பேட்டிகளில் கூட தெரிவித்திருந்தார்.

சினிமாவில் உச்ச நடிகையாக இருந்து கொண்டிருந்தபோதே நடிகை காஜல் அகர்வால் திடீரென கௌதம் கிச்சுலு என்ற தொழில் அதிபரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

தொழிலதிபருடன் திருமணம்:

இவர்கள் இருவரும் முன்னதாக சில ஆண்டுகள் ரகசியமாக காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே காஜலுக்கு நீல் என்ற அழகிய ஆண் குழந்தை பிறந்தான்.

மகன் பிறந்த பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வரும் காஜல் குழந்தையை ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு அழைத்துக்கொண்டு சென்று வருகிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஒரு நடிகையாக தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

அதாவது நான் நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சம்பவம் தான் இது. முதல் நாள் சூட்டிங் முடிஞ்சது அடுத்த நாள் படத்தின் உதவி இயக்குனர் என்னுடைய அனுமதி இல்லாமலேயே நான் இருக்கும் கேரவனுக்கு திடீரென நுழைந்தார்.

அது மட்டும் இல்லாமல், தன் சட்டையை கழற்றி அவர் இதயத்தின் மீது இருக்கும் எனது பெயரோடு கூடிய டாட்டூவை காட்டினார் .

யாருமில்லாத சமயத்தில் அவர் திடீரென அப்படி நடந்து கொண்டதை பார்த்து நான் நடுங்கிப் போய் விட்டேன்.

அத்து மீறி டார்ச்சர் செய்த நடிகர்:

அந்த சமயத்தில் அவர் என் மீது வைத்திருக்கும் அன்பு பச்சை குத்தியதன் மூலம் அவர் வெளிப்படுத்தியது ஆனந்தமாக இருந்தாலும் அவர் அதை செய்த விதம் வெளிப்படுத்திய விதம் சரியில்லை.

இதை நான் மென்மையாக அவரிடமே எச்சரித்தேன். இதயத்தில் படபடப்பு ஏற்பட்டு அது நிற்கவே வெகு நேரம் ஆகிவிட்டது.

பொது இடங்களில் கூட இப்படித்தான் சில ரசிகர்கள் எல்லை மீறி அன்பை காட்டும் விதம் எங்களுக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தும் என காஜல் அகர்வால் பேசியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version