திருமணமான நடிகருடன் தகாத உறவு.. விஷயம் லீக் ஆனதால் வெங்கட்பிரபு பட நடிகை எடுத்த முடிவு..!

சினிமாவில் நடிகர்களை விட நடிகைகளுக்கு தொடர்ந்து சினிமாவில் தங்களை தக்க வைத்துக் கொள்வது என்பது ஒரு கடினமான விஷயமாக இருந்து வருகிறது. ஏனெனில் கதாநாயகர்களாக நடிக்கும் நடிகர்கள் அளவிற்கு பெண்களுக்கு பெரிய ரசிக்கப்பட்டாளம் இருப்பது கிடையாது.

அதனால் அவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் மார்க்கெட்டை இழந்து திரும்ப ஃபீல்ட் அவுட் ஆகுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் தொடர்ந்து போராடி வருகின்றனர் நடிகைகள். இதிலும் சக நடிகர்கள் மீது நடிகைகளுக்கு ஈர்ப்பு வருவது போன்ற சம்பவங்கள் நடக்கும் பொழுது அது சர்ச்சைக்குரிய விஷயமாக மாறுகிறது.

சினிமாவில் அறிமுகம்:

நடிகர் பகத் பாஸில் நடித்த கையேதும் தூரத்து படத்தின் மூலமாக மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை நிகிதா துக்ரல். முதல் படம் அவ்வளவாக அவருக்கு வரவேற்பை பெற்று தரவில்லை.

அதனை தொடர்ந்து தமிழில் விஷ்ணுவர்தன் இயக்கிய குறும்பு படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார் நடிகை நிகிதா துக்ரல். ஆனால் அந்த திரைப்படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை என்றுதான் கூற வேண்டும்.

அதன் பிறகு தமிழில் சத்ரபதி, வெற்றிவேல் சக்திவேல் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாகவே நடித்தார். ஆனாலும் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா திரைப்படத்தில் ஐட்டம் பாடல் ஒன்றிற்கு டான்ஸ் ஆடி இருந்தார்.

கள்ள தொடர்பு:

பல மொழிகளில் நடித்து வந்த இவருக்கு கன்னட நடிகர் தர்ஷன் உடன் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறியது. ஆனால் நடிகர் தர்ஷனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அவருக்கு குழந்தை இருந்தது. இதனால் இவர்கள் இருவருக்கும் இடையேயான காதல் விவகாரம் பிரச்சனையில்தான் முடிந்தது.

 

ஏனெனில் தர்ஷனின் மனைவியான விஜயலட்சுமி இது குறித்து போலீசில் புகார் அளித்தார். மேலும் இதன் காரணமாக தர்ஷன் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் அவர் மனைவி கூறியிருந்தார். இதனை அடுத்து கன்னட சினிமாவில் அவர் நடிப்பதற்கு மூன்று ஆண்டுகள் தடை விதித்து அவரை அங்கிருந்து அனுப்பி விட்டனர்.

இதன் பின்பு 2017 ஆம் ஆண்டு ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டர் நடிகை நிகிதா துக்ரல். தற்சமயம் சினிமாவை விட்டு விலகி இருக்கும் அவர் தொழிலதிபருடன் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

 

 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version