அம்மா கேரக்டர்ன்னு சொன்னாங்க.. ஆனா.. அங்க போனதுக்கு அப்புறம்.. நீலூ ஆண்ட்டி உடைத்த ரகசியம்..!

சினிமாவை பொருத்தவரை அதில் வாய்ப்புகளே கிடைத்தாலும் கூட அது நல்ல திரைப்படத்தின் வாய்ப்புகளாக அமையும் பட்சத்தில் மட்டுமே நடிகைகளுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று தரும் விஷயமாக அது இருக்கும்.

அவர்கள் நடிக்கும் கதாபாத்திரம் அவ்வளவு சிறப்பானதாக இல்லாத பட்சத்தில்  அது அவர்களது சினிமா வாழ்க்கையையே முடித்துவிடும். அதனால்தான் பெரும் நடிகர்களின் திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தாலும் கூட அது நல்ல கதாபாத்திரமாக இருந்தால் மட்டுமே சின்ன நடிகைகள் அதில் நடிப்பதுண்டு.

நல்ல கதாபாத்திரத்திற்கு வெயிட்டிங்:

ஏனெனில் சின்ன நடிகைகள் பொதுவாகவே மக்கள் மத்தியில் பெரிதாக தெரிய மாட்டார்கள் இந்த நிலையில் இந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பது மேலும் அவர்களுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

அப்படி நல்ல கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக காத்திருந்து மோசமான கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் நடிகை நீலூ நஸ்ரின். உண்மையில் அவர் நல்லபடியான கதாபாத்திரத்தில் நடிக்கவே ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் படத்தின் இயக்குனர் அவரை ஏமாற்றி ஒரு மோசமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்த நிகழ்வை ஒரு பேட்டியில் அவர் பகிர்ந்து இருக்கிறார்.

திரைப்படங்களில் நடிப்பதற்காக வாய்ப்புகளை தேடிக்கொண்டிருந்த நீலூ நஸ்ரினுக்கு சிங்கம் புலி திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்தில் ஒரு பெண்ணின் அம்மாவாகதான் நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.

ஜீவா படத்தில் நடந்த சம்பவம்:

அவரும் சரி ஜீவா நடிக்கும் திரைப்படத்தில் அப்படியான ஒரு கதாபாத்திரம் கிடைப்பது நல்ல விஷயம்தானே என்று நடிக்க சென்று இருக்கிறார். இது குறித்து அவர் பேட்டியில் கூறும் பொழுது ”என்னை வைத்து மோசமான காட்சிகளை படமாக்குகிறார்கள் என்று படம் வெளியாகும் வரையிலுமே எனக்கு தெரியாது. எனக்கு தெரியாமலேயே அவர்கள் இந்த காட்சிகளை எல்லாம் படமாக்கி இருந்தார்கள்.

ஆனால் படம் வெளியான பிறகுதான் என்னுடைய கதாபாத்திரம் என்னவென்று எனக்கு தெரிந்தது. இதனை பார்த்த பிறகு எனது கணவர் என்னை மிகவும் மோசமாக திட்டினார் .பிறகு நான் சினிமா துறையை விட்டே சென்று விட்டேன் என்று கூறுகிறார் நடிகை நீலூ நஸ்ரின்.

சிங்கம்புலி திரைப்படத்தில் தோழியை காண வரும் ஜீவா அந்த தோழியின் அம்மாவுடன் தவறான உறவில் இருப்பதாக அந்த காட்சி படமாக்கப்பட்டிருக்கும். அந்த அம்மா கதாபாத்திரத்தில்தான் நீலூ நஸ்ரின் நடித்திருந்தார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version