நயன்தாராவையே படுக்கைக்கு அழைத்த இயக்குனர்.. வெளிவந்த திடுக்கிடும் ரகசியம்..!

சினிமாவில் நடிகைகளுக்கு நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் தொல்லை என்பது நட்சத்திர நடிகையாக இருந்தாலும் வாரிசு நடிகையாக இருந்தாலும் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் வளர்ந்து வரும் நடிகையாக இருந்தாலும் பாரபட்சமின்றி எல்லோருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை நடந்து கொண்டுதான் இருக்கிறது.

பட வாய்ப்பு வேண்டுமா? அப்ப நிச்சயம் நீ அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் உனக்கு நல்ல வாய்ப்பு தருகிறேன் என ஆடிஷனுக்கு முன்னதாகவே கூறி விடுகிறார்கள்.

நடிகை நயன்தாரா:

அது மட்டும் இல்லாமல் இதை ஆடிஷனில் ஒரு ஆப்ஷனாக கூட வைத்து விடுகிறார்கள். அட்ஜஸ்ட்மெண்ட்டிற்கு ok or not என அவர்கள் டிக் செய்தால் அதற்கேற்றார் போல வாய்ப்புகள் கிடைக்கும்.

இல்லை என்றால் வந்த வேகத்தில் அப்படியே திரும்பிப் போய் விட வேண்டியது தான். இதை அனுபவித்த நடிகைகள் அவர்களாகவே வந்து வெளிப்படையாக பேட்டிகளில் கூறி இருப்பதுதான் பேரதிர்ச்சிக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது.

அப்படித்தான் தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் இருந்து வரும் நடிகை நயன்தாரா தனக்கும் இது போன்ற தொல்லை மற்றும் டார்ச்சர் நடந்து இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருப்பது விழிப்புதுங்க வைத்துள்ளது.

நயன்தாராவுக்கே இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டதா? என வளர்ந்து வரும் நடிகைகள் வாயடைத்துப்போய் விட்டார்கள்.

தொகுப்பாளினி to ஹீரோயின்:

கேரளாவில் லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளர்ணியாக தனது பணியை தொடங்கி அதன் மூலமாக திரைப்பட வாய்ப்பு பெற்றவர்தான் நடிகை நயன்தாரா .

இவர் தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

முதல் படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தையும் அடையாளத்தையும் கொடுத்தது தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக சந்திரமுகி திரைப்படத்தில் நடித்த மாபெரும் வெற்றியை படைத்தார்.

தொடர்ச்சியாக அடுத்தடுத்த பல வெற்றி படங்களில் நடித்து வந்த நடிகை நயன்தாராவுக்கு ரசிகர்கள் மளமளவென பெருக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார்.

இதனிடையே அவர் பாலிவுட் சினிமாவிலும் ஜவான் திரைப்படத்தில் ஷாருகானுக்கு ஜோடியாக நடித்து மாபெரும் வெற்றி பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

தொடர்ச்சியாக அங்கு அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனத்தை செலுத்தி பாலிவுட்டின் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்துள்ளார்.

படவாய்ப்பிற்கு படுக்க கூப்பிட்டார்:

இந்த நிலையில் தான் அட்ஜஸ்ட்மென்ட் கொடுமை அனுபவித்ததை குறித்து பேசி இருக்கும் நடிகை நயன்தாரா சினிமா துறையை பொறுத்தவரை நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைக்க அட்ஜஸ்ட்மென்ட் செய்யும் நிலை எல்லோருக்கும் ஏற்படும்.

அந்த சம்பவம் எனக்கும் நடந்திருக்கிறது என உண்மை சம்பவத்தை கூறி அதிர வைத்துள்ளார். ஆம் ஆரம்பத்தில் என்னுடைய படத்தில் முக்கிய ரோல் தருகிறேன். அதற்கு நீங்கள் அட்ஜஸ்ட் பண்ண வேண்டும் என இயக்குனர் ஒருவர் நேரடியாக என்னிடம் கேட்டார்.

ஒரு பெரிய நடிகரின் படத்தில் நடிக்க அப்படி ஒருவர் கேட்டார். உடனே நான், எனக்கு என் திறமை மீது மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.

எனவே இது போன்ற விஷயமெல்லாம் என்னால் முடியாது என தைரியமாக நேரடியாக அவரிடம் கூறிவிட்டேன். அதன் பிறகு தொடர்ந்து முயற்சி செய்து இன்று இந்த அளவுக்கு நல்ல இடத்தில் இருக்கிறேன் என கூறினார் நயன்தாரா.

தமிழ் சினிமாவில் நட்சத்திர அந்தஸ்தில் இருக்கும் நடிகை நயன்தாராவுக்கேஇப்படி ஒரு நிலைமை ஏற்பட்டது என்றால் சாதாரண நடிகைகள் எம்மாத்திரம்? என அட்ஜஸ்ட்மென்ட் குறித்து சக நடிகைகள் புலம்பியுள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version