தமிழ்நாட்டில் அரசியல், சினிமா என்று இரண்டு களத்திலும் தனது காலடி தடத்தை பதித்த ஒருவராக உதயநிதி ஸ்டாலின் இருந்து வருகிறார். ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகமானார் உதயநிதி.
அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் அவருக்கு நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தன. அதிகபட்சம் இவர் நடிக்கும் திரைப்படங்களில் சந்தானம் காமெடி நடிகராக இருப்பதை பார்க்க முடியும்.
உதயநிதி திரைப்பயணம்:
முதலில் காமெடி கதாநாயகனாக நடித்து வந்த உதயநிதி போக போக கொஞ்சம் சீரியசான கதைகளை தேர்ந்தெடுக்க துவங்கினார். அவர் நடித்த திரைப்படங்களில் கெத்து, மனிதன், சைக்கோ, நெஞ்சுக்கு நீதி, கழகத் தலைவன் போன்ற திரைப்படங்கள் எல்லாமே சீரியஸான கதைகளத்தை கொண்ட திரைப்படங்கள் என்று கூறலாம்.
மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு உதயநிதி திரைப்படம் எதிலும் நடிக்கவில்லை. ஆனால் எதிர்காலத்தில் திரும்பவும் திரைத்துறைக்கு வருவதாக அவர் கூறியிருக்கிறார். தற்சமயம் விளையாட்டுத்துறை அமைச்சராக அவரது பணியை தொடர்ந்து வருகிறார்.
தயாரிப்பு நிறுவனம்:
இதற்கு நடுவே திரைப்படங்களை வெளியிட்டு வரும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தை வழக்கப்படி நடத்தி வருகிறார் உதயநிதி. அவரது மனைவியும் இயக்குனருமான கிருத்திகா உதயநிதியும் சேர்ந்து அந்த நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
முதன்முதலாக குருவி திரைப்படத்தை தயாரித்து வெளியிட்ட ரெட் மூவிஸ் நிறுவனம் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. போன வருடம் மட்டும் இந்த நிறுவனம் அதிகமான திரைப்படங்களை திரையில் வெளியிட்டுள்ளது.
அமலாக்கத்துறை நடவடிக்கை:
இந்த நிலையில் பல அரசியல்வாதிகளிடம் சோதனை நடத்தி வரும் அமலாக்கத்துறை தற்சமயம் உதயநிதி ஸ்டாலினின் நிறுவனங்கள் மீதும் சோதனையை நடத்த துவங்கி இருக்கின்றனர்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கல்லல் குரூப் மற்றும் உதயநிதி அறக்கட்டளை தொடர்பான 8 அலுவலகங்களிலும் அமலாக்கத்துறை சோதனையை நடத்தி இருக்கின்றனர். இது தொடர்பாக நடந்த சோதனையில் அறக்கட்டளையை சேர்ந்த 36.3 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களை பறிமுதல் செய்திருக்கின்றனர்.
ED has provisionally attached various immovable properties across Tamil Nadu, on 25/5/2023 valued at Rs. 36.3 Crore and further attached Rs. 34.7 lakh available in the bank account of M/s Udayanidhi Stalin Foundation in the case of Kallal Group and others.
— ED (@dir_ed) May 27, 2023
அதேசமயம் அவரது வங்கி கணக்கில் இருக்கும் 36.3 லட்சம் ரூபாய் பணத்தையும் அமலாக்க துறையினர் முடக்கி இருக்கின்றனர். இந்த நிலையில் தற்சமயம் சர்ச்சைக்குரிய ஒரு விஷயமாக இந்த பிரச்சனை மாறி இருக்கிறது.
மேலும் அமலாக்க துறையின் சோதனைகள் இதோடு நிற்காது தொடர்ந்து இன்னும் உதயநிதி ஸ்டாலினின் மற்ற நிறுவனங்கள் மீதும் சோதனைகள் தொடரப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்று பொதுமக்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரங்களிலும் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.