பாடலை பாடும் போதே அழுத பிரபல பாடகி.. என்ன பாடல்..? யார் அந்த பாடகி தெரியுமா..?

உணர்ச்சிபூர்வமான பாடலுக்கு மயங்காத மனிதர்களே இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக பல பாடல்களை எடுத்து சொல்லலாம்.

குறிப்பாக தமிழ் சினிமாவில் வெளிவந்த பல்வேறு திரைப்படங்கள் மனதை வருடக்கூடியதாகவும் தங்களது நிகழ்காலத்தையும் தங்களது வாழ்க்கை சம்பவங்களையும் அப்படியே எடுத்துரைப்பதாக இருக்கும்.

அதனால் நம்மை நாமே மெய்மறந்து அந்த பாடலை ரசித்து அந்த பாடலினுள் சென்று விடுவோம் . அப்படி பல பாடல்களை எடுத்துக் கொள்ளலாம்.

பாடல்களும் மனித மனங்களும்:

குறிப்பாக வறுமை, பசி , பட்டினி மற்றும் குடும்ப வாழ்க்கை குழந்தைகள் இப்படி எமோஷனல் பாடல்கள் நம்மை கட்டி இழுக்கும்.

மனதிற்கு பிடித்த பாடல் என்றால் மெய்மறந்து ஒன்றுக்கு பலமுறை திரும்பத் திரும்ப கேட்டு மனதை தேற்றிக் கொள்வோம்.

அந்த வகையில் பாடல்களுக்கும் நம் மனதிற்கும் மிகவும் நெருக்கமான இடத்தை பிடிக்கும். நெடுதூரப் பயணங்களின் போதும், தாலாட்டு பாடல்கள் , பக்தி பாடல்கள் , காதல் பாடல்கள் உள்ளிட்ட எல்லா விதமான நேரத்திலும் பாடலுக்கும் மனிதர்களுக்கும் மனதளவில் மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது.

அப்படித்தான் பிரபல பாடகி ஒருவர் ஒரு ஒரு உணர்ச்சிபூர்வமான பாடலை பாடும் போது அந்த பாடல் வரிகளின் தாக்கத்தினால் அந்த பாடலை பாடும் போதே அழுது இருக்கிறார்.

மிகவும் உணர்ச்சிபூரமான பாடல்கள் கேட்கிற நம்மளை மட்டும் பாதிக்காது அந்த பாடலை பாடும் மற்றும் இசையமைக்கும் பாடலை எழுதும் இதயங்களையும் பாதிக்கக் கூடியதாக தான் இருக்கும்.

அப்படித்தான் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. தமிழ் சினிமாவில் இளையராஜா இசையமைப்பில் உருவாகிய. திரைப்படம் தான் அச்சாணி.

“மாதாவின் கோவிலில்” பாடல்:

1978 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படமாக பார்க்கப்பட்டது .

அச்சாணி திரைப்படத்தை காரைக்குடி நாராயணன் இயக்கி இருந்தார். இப்படத்தில் படத்தில் முத்துராமன் மற்றும் லட்சுமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.

இத்திரைப்படத்தில் இடம் பெற்று மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த பாடல் தான் “மாதாவின் கோவிலில்” இந்த பாடலை பிரபல பாடகியான எஸ் ஜானகி அம்மா தான் பாடியிருந்தார்.

பாடலை உருவாக்குவதற்காக இசைஞானி இளையராஜா ரெக்கார்ட் செய்யும் போது ஜானகி அம்மா அந்த பாடலை பாடிக் கொண்டிருக்கும்போதே திடீரென பாடுவதை நிறுத்திவிட்டு அழுதாராம்.

ஆம், இந்த பாட்டில் வரக்கூடிய குறிப்பிட்ட ஒரு வரிகளை பாடும்போது அதனை பாட முடியாமல் அழுது கொண்டே இருந்தாராம்.

இளையராஜா ஜானகி அம்மாவை பார்த்து என்ன ஆயிற்று? என கேட்டதற்கு….இசையும் இந்த பாடல் வரிகளையும் கேட்டுக்கொண்டு என்னால் உணர்ச்சிவசப்பட முடியாமல் இருக்க முடியவில்லை என மிகுந்த. மன வருத்தத்தோடு கூறினாராம்.

பாடும்போதே அழுத ஜானகி அம்மா:

பின்னர் சில மணி நேரம் ஓய்வு எடுத்து விட்டு அதன் பிறகு மீண்டும் பாடினாராம் ஜானகியமா. இப்பாடலுக்கு வரிகளை எழுதியது மறைந்த கவிஞரும் திரைப்பட பாடல் ஆசிரியருமான கவிஞர் வாலி என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் பழம் பெறும் பாடகியான ஜானகி அம்மா திரைப்பட பாடகியாக இருந்து பெரும் புகழ்பெற்றவர்.

இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் இதுவரை 40 ஆயிரத்திற்கும் அதிகமான திரைப்பட பாடல்களைப் பாடி புகழ்பெற்ற பாடகியாக இருந்து வருகிறார் .

இவர் நான்கு முறை தேசிய விருதுகளை பெற்று கவுரவிக்கப்பட்ட பாடகியாகவும் ஜானகி அம்மா என்று மரியாதையோடு மக்களால் அழைக்கப்படும் பாடகியாகவும் இருந்து வருகிறார் .

ஜானகி அம்மாவின் திரைப்பயணம்:

இந்தியாவின் மிகச்சிறந்த பிரபலமான பின்னணி பாடகர்களுள் ஒருவரான இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ,ஹிந்தி ,ஒடியா, பெங்காளி உள்ளிட்ட 17 மொழிகளில் தனிப்பாடல்கள் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்கள், ஆவண படங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி என ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பதிவு செய்திருக்கிறார்.

இந்த அளவுக்கு பெரும் புகழ்பெற்ற பாடகியான ஜானகி அம்மாவிற்கு தற்போது 86 வயது ஆகிறது. தொடர்ந்து பாடல்கள் பாடவில்லை என்றாலும் ஏதேனும் சில படங்களில் அவ்வப்போது தனது குரலை ஒலித்து விட்டு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

1957ஆம் ஆண்டில் தனது திரைப்பயணத்தை பாடகியாக பயணித்த இவர் இன்று வரை சிறந்த பாடகியாக பயணித்து வருகிறார்.

இளையராஜாவின் இசையில் இணைந்து பல்வேறு திரைப்பட பாடல்களை பாடி இருக்கும் பெருமை ஜானகி அம்மாவுக்கு இருக்கிறது .

இசைஞானி இளையராஜாவின் இசைக்கு பெருமை சேர்த்த பாடகியாகவும் ஜானகி அம்மாவின் குரல்கள் அமைந்து பட்டி தொட்டி ஓங்கி ஒலித்தது என்றால் அது மிகையாகாது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version