படையப்பா கிளைமாக்ஸில் நடந்த சண்டை.. காரணம் ரஜினியே தான்.. ரகசியம் உடைத்த கே.எஸ்.ரவிக்குமார்..!

90ஸ் காலகட்டத்தில் கே எஸ் ரவிக்குமாரின் திரைப்படங்கள் என்றாலே தனி ரசிகர்கள் கூட்டம் இருப்பார்கள். அவரது படங்கள் மாபெரும் வெற்றி படங்களாக அமையும்.

ஆக்சன் காட்சிகள், சென்டிமென்ட், காதல் என அனைத்துமே கலந்த கலவையான படமாக இருக்கும். இதனால் பலதரப்பட்ட மக்களை வெகுவாக கவரும்.

இயக்குனர் கே. எஸ் ரவிகுமார்:

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் விரும்பி பார்க்கும் படமாக கே எஸ் ரவிக்குமாரின் படங்கள் இடம் பெறும்.

இதனால் கே எஸ் ரவிக்குமார் படங்களுக்கு மிகப்பெரிய மவுஸ் இருந்து வந்தது. அப்படித்தான். 1999 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த சக்கை போடு போட்ட திரைப்படம் “படையப்பா” .

இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் , நாசர் , மணிவண்ணன், அப்பாஸ் என பல நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள்.

இப்படம் வெளியான சமயத்தில் இந்தியன் 2 படத்தின் வசூலையே முறியடித்து மாபெரும் சாதனை படைத்தது என்றால் பார்த்துக்கோங்க.

படையப்பா திரைப்படம்:

அப்போ எந்த அளவுக்கு கே எஸ் ரவிக்குமாரின் படங்கள் அந்த காலத்தில் மவுஸ் இருந்தது என்று. குறிப்பாக இப்படத்தில்தான் நீலாம்பரியின் கேரக்டர் அதிக அளவில் பேசப்பட்டது .

ரஜினிக்கு ஈடாக நீலாம்பரியின் கேரக்டர் ஒரு வில்லியாக பேசப்பட்டது என்றால் அது படையப்பா திரைப்படத்தில் தான்.

அந்த அளவுக்கு வில்லி கதாபாத்திரத்திற்கு மிகவும் அழுத்தம் கொடுத்து படத்தை இயக்கி இருந்தார் கே எஸ் ரவிக்குமார்.

இன்று வரை நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு அது மிகப்பெரிய அடையாள திரைப்படமாகவும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது கே எஸ் ரவிக்குமார் படையப்பா படத்தை குறித்த பல விஷயங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்.

அப்போது கிளைமாக்ஸ் காட்சி எடுக்கும் போது ஏற்பட்ட சண்டை குறித்தும் அவர் பேசியிருப்பது தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

படையப்பா திரைப்படத்தில் ஆரம்பத்திலிருந்து ரஜினியுடன் எனக்கு சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கத்தான் செய்தது.

ரஜினியுடன் சண்டை:

அதுவும் கிளைமாக்ஸ் பிரச்சனை போது நடந்த பிரச்சனை வெளியே யாருக்குமே தெரியாது. அந்த அளவுக்கு எனக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி விட்டார் .

ஆம் நீலாம்பரி இறந்ததும் அவருடைய கண்களை மூடி விட்டு ரஜினிகாந்த் நடந்து போய் வேல் எடுத்து வருவார்.

அப்போது வெற்றி கொடி கட்டு பாட்டு வைக்க சொல்லி நான் சொல்லியிருந்தேன் ஆனால் ரஜினிகாந்த் அந்தப் பாட்டு வேணா அதைவிட எம்பேரு படையப்பா பாட்டு வைக்க சொல்லுங்க என்று ரமேஷ் கண்ணாவிடம் சொல்லி இருக்கிறார்.

அது என்னிடம் அவர் நேரடியாக கூறியிருக்கலாம். எதையுமே ரஜினிகாந்த் என்னிடம் நேரடியாக கூறவே மாட்டார்.

படத்தில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் ரமேஷ் கண்ணாவை அழைத்து இதை இப்படி மாற்றலாம். அதை அப்படி மாற்றலாம் என கூற உடனே ரமேஷ் கண்ணா வந்து என்னிடம் சண்டை இடுவார் .

இது இப்படி மாற்றினால் நன்றாக இருக்கும் என்று என்கிட்ட வந்து ரமேஷ் கண்ணா “எம்பேரு படையப்பா” பாட்டு கிளைமாக்ஸ் காட்சியில் வைக்க சொல்லி சண்டையிட்டார் .

ஆனால், நான் ஒரு வில்லியாக இருந்தாலும் ஒரு பெண் இறந்துவிட்டால் அவளுடைய கண்களை ஹீரோ மூடிவிட்டு நடந்து போகும்போது “என் பேரு படையப்பா” என்று போட்டு அதிரடி கிளப்பினால் அது எப்படி செட்டாகும்?

க்ளைமாக்ஸ் காட்சியில் மோதல்:

அது ஹீரோவுக்கு அவ பெயரை தான் கொடுக்கும் அதனால் “எம்பேரு படையப்பா” பாடலுக்கு பதிலாக “வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா தடைக்கல்லும் உனக்கு ஒரு படிக்கட்டப்பா’ என்ற வரிகள் வைத்தால் அந்த இடத்திற்கு மிகப் பொருத்தமாக இருக்கும்.

நீலாம்பரி போன்று உனக்கு எத்தனை தடைகள் வாழ்க்கையில் வந்தாலும் அதை நீ படிக்கட்டாக மாற்றி முன்னேற வேண்டும் என்பதே அந்த வார்த்தைகளின் மூலம் எடுத்துரைக்கும்.

இதை ரசிகர்களும் விரும்புவார்கள் என்று நான் எடுத்துக் கூறி சண்டை போட்டேன். பின்னர் நான் கூறியது படியே அது வொர்க் அவுட் ஆகியது.

இப்படித்தான் படையப்பா திரைப்படத்தின் ஆரம்ப முதல் கடைசி வரை பல பிரச்சனைகள் ஏற்பட்டது என கே எஸ் ரவிக்குமார் பேசி இருக்கிறார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam