நயன்தாராவுடன் ஏற்பட்ட சண்டை உண்மை தான்..! ஆனால்.. நடிகை திரிஷா சொன்னதை கேட்டீங்களா..?

தமிழ் சினிமாவில் தற்போது போட்டி போட்டிக்கொண்டு முன்னணி நடிகர்களுக்கு அடுத்தடுத்து ஜோடியாக நடித்து நட்சத்திர நடிகைக்காக போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நடிகைகள் தான் திரிஷா மற்றும் நயன்தாரா.

இவர்கள் இருவரும் கமல்ஹாசன் ,விஜய், அஜித் என பல நட்சத்திர நடிகர்களுக்கு ஜோடியாக அடுத்தடுத்து கமிட் ஆகி நடித்து வருகிறார்கள் .

திரிஷா -நயன்தாரா:

குறிப்பாக பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இந்த நடிகைகளுக்கு மாற்றி மாற்றி மவுஸ் கூடிக்கொண்டே போகிறது.

இதனால் இவர்கள் இருவருக்குள் தொழில் ரீதியாக பெரிய போட்டியே நிலவி வருகிறது. வயது கிட்டத்தட்ட 40 நெருங்கியும் முன்னணி நட்சத்திர நடிகைகளாக திரிஷா மற்றும் நயன்தாரா மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படியாக சமயத்தில் நடிகை திரிஷா அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.மேலும், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்திலும் திரிஷா கமிட்டாகி நடித்த வருகிறார்.

அதேபோல் நயன்தாராவை எடுத்துக் கொண்டால் இவர் மண்ணாங்கட்டி திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார் .

அடுத்தடுத்த படங்களில் போட்டி:

அத்துடன் தனி ஒருவன் 2 உள்ளிட்ட திரைப்படங்களை தன்னுடைய கைவசம் வைத்திருக்கிறார் நயன்தாரா
இப்படி நட்சத்திர நடிகைகளாக மாற்றி மாற்றி போட்டி போட்டுக் கொண்டு அடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்கள்.

இதனிடையே சில வருடங்களுக்கு முன்னர் திரிஷா நயன்தாரா இருவருக்கும் பயங்கரமான சண்டை ஏற்பட்டு இருவரும் பேசிக் கொள்ளாமல் இருந்து வந்தார்கள்.

இது ஒட்டுமொத்த கோலிவுட் திரைத்துறை ரசிகர்களுக்கும் தெரியும் அளவுக்கு பெரிய சண்டையாக ஏற்பட்டது.

விருது விழாக்கள் , பொது நிகழ்ச்சிகள் என எங்கேயும் சந்தித்துக் கொண்டால் கூட இவர்கள் இருவரும் பேசிக் கொள்வது இல்லை என செய்தியாக வெளியாகியது.

விஜய்யால் ஏற்பட்ட சண்டை?

இந்த சண்டைக்கான காரணம் குறித்து தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது. தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் குருவி .

இந்த திரைப்படத்தில் நடிப்பது தொடர்பாக திரிஷாவுக்கும் நயன்தாராவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருப்பார். இவர்களின் இந்த சண்டை விவகாரம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கும் திரிஷா, எனக்கும் நயன்தாராவுக்கும் இடையே குருவி படத்தின் போது மனக்கசப்பு ஏற்பட்டது உண்மைதான்.

ஆனால், அது தொழில் காரணங்களுக்காக அல்ல. தனிப்பட்ட விஷயத்திற்கான காரணம் எனக் கூறியிருந்தார் .

அதை அடுத்து காலம் நாங்கள் இருவரும் பேசாமல் இருந்தோம். இது நடந்தது உண்மைதான் என திரிஷா ஒப்புக் கொண்டிருக்கிறார்.

சண்டை உண்மை தான்… ஒப்புக்கொண்ட திரிஷா:

மேலும் இவர்களின் இந்த சண்டை விவகாரம் குறித்து நயன்தாரா தன்னுடைய கருத்தை பதிவு செய்த போது எங்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது உண்மைதான் .

பின்னர் சமரசம் செய்ய திரிஷா தான் முதலில் என்னை அணுகி பேசினார். அதன் பிறகு நாங்கள் இருவரும் பேசிக்கொண்டோம் என நயன்தாரா கூறியிருந்தார்.

இப்படியாக நயன்தாரா – திரிஷா இருவருமே தங்களுக்குள் ஏற்பட்ட சண்டை உண்மைதான் என ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் .

இருந்தாலும் இந்த விவகாரத்தில் திரிஷா தான் செம க்யூட் என பலரும் கூறி வருகிறார்கள். காரணம் இந்த சண்டையில் முதல் ஆளாக த்ரிஷா தான் சென்று பேசி சமரசம் ஆகி இருக்கிறார். அவரது நல்ல எண்ணம் பாராட்டத்தக்க கூடியதாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

மேலும், நயன்தாரா நிஜத்தில் கூட ஹெட் வெயிட் உள்ளவர் போல அதனால்தான் அவர் பேசாமல் இருந்து வந்திருக்கிறார்.

முதல் ஆளாக சென்று சண்டையை முடித்துக் கொண்டிருக்கிறார்… என் தலைவிக்கு எவ்வளவு நல்ல குணம் பார்த்தீங்கள? என திரிஷாவின் ரசிகர்கள் அவரை புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version