முதல் கணவர் நல்ல மனுஷன் தான்.. ஆனால்.. இரண்டாம் திருமணம் குறித்து பேசிய நடிகை ஸ்ரித்திகா..!

சமீபத்தில் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பிரபல சீரியல் நடிகை தான் ஸ்ரித்திகா இவர் நாதஸ்வரம், மாமியார், தேவி ,உறவுகள், சங்கமம் ,வைதேகி ,உயிர்மெய் ,குலதெய்வம் உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார் .

மேலும் கல்யாணப்பரிசு , அழகு உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான சீரியல் நடிகையாக தமிழ் ரசிகர்களின் மனதை ஈர்த்தார்.

சீரியல் நடிகை ஸ்ரித்திகா:

மலேசியாவில் இருந்து நடிப்பதற்காக சென்னைக்கு வந்த இவர் பல்வேறு தொடர்களில் அடுத்தடுத்து நடித்து இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியல் நடிகையாக இந்த இடத்தை பிடித்திருக்கிறார் .

தொலைக்காட்சி நடிகையாகவும் இருந்து வருகிறார். ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கும் இவர் “மதுரை டு தேனி” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது .

இவர் திருமுருகன் நடித்த நாதஸ்வரம் தொடரில் நடித்ததன் மூலமாகத்தான் ஒட்டுமொத்த தமிழ் இல்லத்தரசிகளின் மனம் கவந்தார் .

குறிப்பாக அந்த தொடர் தான் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. நாதஸ்வரம் ஸ்ரீதிவ்யா என்று சொல்லும் அளவுக்கு அந்த தொடர் இவருக்கு பெரும் புகழை கொடுத்தது .

முதல் கணவரை பிரிந்த ஸ்ரித்திகா:

2012 ஆம் ஆண்டு சன் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியில் சிறந்த மருமகளுக்கான விருதை நாதஸ்வரம் தொடருக்காக பெற்று கௌரவிக்கப்பட்டார்.

இப்படியாக சீரியலில் பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டு வந்த ஸ்ரீதிவ்யாவின் முதல் திருமண வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியானதாக இல்லை .

இதனால் கணவரை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து விட்டார். கணவரை பிரிந்த பிறகும் தொடர்ச்சியாக சீரியல்களில் நடித்து வந்தார்.

பின்னர் மகராசி சீரியலில் தன்னுடன் நடித்த ஆரியன் என்பவரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

முதல் கணவருடன் இதுதான் பிரச்சனை:

இந்நிலையில் முதல் கணவரை ஏன் விவாகரத்து செய்தேன்? அவரை பிரிவதற்கான காரணம் என்ன என்பது பற்றி தனது இரண்டாவது கணவர் ஆரியனுடன் இணைந்து அந்த பேட்டியில் பேசியிருந்தார்.

அதாவது நானும் சரி ஆரியனும் சரி முதல் திருமணத்தில் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டோம். முதல் வாழ்க்கையில் கிட்டத்தட்ட எங்கள் இருவருக்குமே ஒரே மாதிரியான பிரச்சனைதான் .

ன்னுடைய முதல் கணவர் மிகவும் நல்ல மனிதர் தான். அவரைப் பற்றி எந்த குறையும் சொல்ல முடியாது. ஆனால், எங்கள் இருவருக்குள் வாழ்க்கை சிறப்பானதாக அமையவில்லை.

காரணம் எங்களுக்குள் ஆரம்பத்தில் இருந்து கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தது. நாங்கள் இது போக போக சரியாக விடும் என நினைத்துக் கொண்டு வாழ்க்கை கடந்து வந்தோம்.

ஆனால், அது பிரச்சனை மேலும் அதிகமாக தான் ஆனது. அதனால் ஒரு கட்டத்திற்கு மேல் இப்படி வாழ்ந்தால் சரியாக இருக்காது என இருவரும் பரஸ்பரம் மனதுடன் பேசி விவாகரத்து செய்து பிரிந்து விட்டோம்.

எங்களுடைய விவாகரத்துக்கான மிக முக்கிய காரணமே “யாராக இருந்தாலும் அவர்களின் இயற்கையான குணத்தில் தான் இருக்க வேண்டும். நமக்காக அவர் மாற வேண்டும் என்று நினைக்க கூடாது. அப்படி நினைத்து விட்டால் அங்கு தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது .

இதுதான் எனக்கு முதல் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை. அதனால்தான் அவரை விட்டுப் பிரிந்தேன் என கூறி இருக்கிறார்.

இரண்டாம் வாழ்க்கை சிறப்பா இருக்கு:

ஆனால் இரண்டாம் திருமண வாழ்க்கை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. ஆரியனும் கிட்டத்தட்ட முதல் திருமணத்தில் அதே பிரச்சினை தான் சந்தித்தார்.

நானும் ஆர்யனும் நல்ல நண்பர்களாக இருந்தோம். முதல் மனைவியுடன் சேர்த்து வைக்க நானும் சில முயற்சிகளை செய்தேன்.

ஆனால் அது சரிவர அமையவில்லை. நாங்கள் இருவரும் மகராசி சீரியல் நடித்த போது நட்பாக பழகி வந்தோம் . அப்போ போது நிறைய ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டதை பார்த்து காதல் கிசுகிசு வந்தது .

பின்னர் பெற்றோர்களும் நீங்கள் காதலிக்கிறீர்களா? திருமணம் செய்ய விருப்பப்படுகிறீர்களா? என கேட்டனர்.

அதன் பின்னர் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து நாங்கள் திருமணம் முடிவை எடுத்து தற்போது திருமணம் செய்து கொண்டோம் என ஸ்ரித்திகா அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version