ஆடு ஜீவிதம் படம் எப்படி இருக்கு..? திரை விமர்சனம்..!

நடிகர் பிருத்விராஜ், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான ஒரு மலையாள நடிகர். மொழி, கண்ணாமூச்சி ஏனடா, அம்முவும் நானும், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

இதில் கனா கண்டேன் என்ற படத்தில், வில்லனாக நடித்துதான் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். ஆனால் மொழி படத்தில் அவரது நடிப்பு வேற லெவலில் இருந்தது.

ஆடுஜீவிதம்

மஞ்சும்மெல் பாய்ஸ், பிரம்மயுகம், பிரேமலு போன்ற மலையாள படங்கள் தொடர்ந்து பெரிய வெற்றிகளை பெற்று வரும் நிலையில், தற்போது வெளியாகி உள்ள படம்தான் ஆடுஜீவிதம் ( த கோட் லைட்). பிளஸ்ஸி டைரக்ட் செய்துள்ள இந்த படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் ஒரு உண்மைச்சம்பவம் என்று கூறப்படுகிறது.

கொத்தடிமை

நஜீப் என்ற கேரக்டரில் பிருத்விராஜ் இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ளார். சவுதி அரேபியால் அசிஸ்டென்ட் வேலைக்கு அழைத்து செல்லப்படும் அவர், அங்கு கொத்தடிமையாக பணி செய்ய நியமிக்கப்படுகிறார். இந்த வேலைக்கு நான் வரவில்லை, என்னை விட்டுவிடுங்கள் என கெஞ்சி கதறி அழுகிறார். பலவிதமான கொத்தடிமை வேலைகளை செய்யும் அவர் அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கும் போது, முதலாளியிடம் மாட்டிக் கொள்கிறார்.

அடையாளம் தெரியாத அளவுக்கு

இப்படியே பல ஆண்டுகள் அங்கு கொத்தடிமையாக வாழும் அவர் தன் நிறம், அடையாளத்தை இழந்து, ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போய் விடுகிறார். அந்த அடிமைத்தனத்தில் இருந்து அவர் மீண்டாரா, அங்கிருந்து தப்பித்தாரா மீண்டும் தன் பழைய வாழ்க்கையை அடைந்தாரா என்பதுதான் ஆடுஜீவிதம் படத்தின் கதை.

பாலைவனத்தில்…

எழுத்தாளர் பென்யமின் எழுதிய ஆடுஜீவிதம் என்ற நாவலை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படம் இது. அடிமை நஜீப் பட்ட கஷ்டங்களை தன் தத்ரூபமான நடிப்பால் வெளிப்படுத்தி ரசிகர்களை உருக வைத்திருக்கிறார் பிருத்விராஜ். பாலைவனத்தில் தண்ணீருக்காக தவிக்கும் காட்சியிலும், ரோடு தெரியாமல் தடுமாறும் காட்சியிலும் தன் பண்பட்ட நடிப்பை நிரூபித்திருக்கிறார்.

தேசிய விருது கிடைக்க வாய்ப்பு

இந்த படத்தில் இப்படி ஒரு நடிப்பை தந்த பிருத்விராஜூக்கு தேசிய விருது கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். சுனில் ஒளிப்பதிவு, படத்தை வேற லெவலில் கொண்டு சென்றிருக்கிறது.

இதையும் படியுங்கள்: அடிக்குற வெயிலுக்கு யாரு ப்ரா போடுறது.. முழு பின்னழகை காட்டி கிளாமர் விருந்து வைத்த ஆஷ்னா சவேரி..!

இந்த படத்தின் எடிட்டிங் சிறப்பாக இருந்தாலும், படத்தின் திரைக்கதை ஓட்டம் பல இடங்களில் மெதுவாக இருப்பது போல தோன்றுகிறது. அதுதான் படத்தின் மைனஸ் பாயிண்டாக சொல்ல முடியும். அமலாபாலும் நடித்திருக்கிறார். அவரது கேரக்டரை சிறப்பாக செய்து இருக்கிறார்.

ஆகச்சிறந்த படைப்பு

நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, இசை, கதை என அனைத்து விஷயங்களிலும் படம் ரசிகர்களின் மனம் கவருகிறது. மலையாளத்தில் வெளிவந்த மற்றொரு ஆகச்சிறந்த படைப்பு ஆடுஜீவிதம் என்றால் அது மிகையல்ல. நிச்சயம் ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம் ஆடுஜீவிதம் என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்த படம் குறித்த விமர்சனத்தில் 5க்கு 3.75 சிறந்த தகுதி புள்ளிகளை பெற்ற படமாக கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: நெசமாவே ட்ரெஸ் போட்டிருக்கீங்களா.. தாராளமாக காட்டும் தாராளபிரபு நடிகை.. Zoom போட்டு தேடும் ரசிகர்கள்..!

ஹீரோயிசத்தை நம்பும் தமிழ் இயக்குனர்கள் திருந்துவார்களா?

தமிழ் ரசிகர்களை கவரும் விதமான மலையாள படங்கள் வந்துக்கொண்டே இருக்கின்றன. ஹீரோயிசத்தை நம்பும் கேங்ஸ்டர் படங்களை எடுத்து, தமிழ் சினிமாவின் தரத்தை குறைத்துக்கொண்டே இருக்கிறார்கள் தமிழ்பட இயக்குனர்கள். ஆடுஜீவிதம் போன்ற படங்களை பார்த்தாவது இவர்கள் திருந்துவார்களா, என்பதுதான் தமிழ் சினிமா ரசிகர்களின் கேள்வி

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam