“இது தளபதி விஜய்க்கு கிடைத்த வெற்றி..” முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பை பாருங்க..!

அரசியலுக்கு வந்தது முதலே விஜய் மீது மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு என்பது அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது. விஜய் கண்டிப்பாக மக்களுக்கு ஏதேனும் நன்மைகள் செய்வார் என்பது இளம் தலைமுறையினர் மத்தியில் ஆழமாக இருந்து வரும் நம்பிக்கையாக இருக்கிறது.

நடிகர் விஜய்க்கு வெகு காலங்களாகவே அரசியலுக்கு வரவேண்டும் என்பது ஆசையாக இருந்து வருகிறது. அதற்கு தகுந்தார் போல நிறைய திரைப்படங்களில் அரசியல் பேசியும் நடித்திருந்தார். ஆனால் அரசியலுக்கு வருவதற்கு அவருக்கு சில ஒரு சில யோசனைகள் இருந்து வந்த நிலையில் தொடர்ந்து அதற்கு காலம் தாழ்த்தி வந்தார்.

அரசியலுக்கு வந்த விஜய்:

இந்த நிலையில் இந்த வருட துவக்கத்திலேயே அரசியலுக்கு வருவதை பகிரங்கமாக அறிவித்தார் விஜய். மேலும் இதனை தொடர்ந்து திரை வாழ்க்கையில் இருந்து விலகப் போவதாகவும் அவர் அறிவித்திருந்தது பலருக்கும் அதிர்ச்சியை அளிக்கும் தகவலாக இருந்தது.

ஏனெனில் தளபதி ரசிகர்கள் அவரது திரைப்படத்தைதான் வெகுவாக ரசித்து வந்தனர். அதற்கே இனிமேல் வாய்ப்பில்லை என தெரிகிறது. அது கொஞ்சம் அவர்களுக்கு வருத்தத்தைதான் அளித்தது என்றாலும் கூட ஒரு அரசியல் தலைவராக தளபதி இருப்பார் என்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்து வருகிறது.

இந்த நிலையில் அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்தது முதலே நிறைய உதவிகளை மக்களுக்கு செய்ய தொடங்கினார் விஜய். அந்த வகையில் போன வருடம் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுத்த மாணவர்களுக்கு தன்னுடைய சொந்த செலவில் விருது வழங்கும் விழா ஒன்றை நடத்தினார் விஜய்.

அரசு எடுத்த முடிவு:

அதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கினார். சில மாணவர்களுக்கு ஊக்க தொகையும் வழங்கினார். அது அனைவராலும் பாராட்டப்படும் ஒரு விஷயமாக அமைந்தது.

அதற்குப் பிறகு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் விஜய் உதவினார் இந்த நிலையில் இந்த வருடம் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு அரசு சார்பில் பாராட்டு விழா எடுப்பதற்கு தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு வரை தமிழ்நாடு அரசு இப்படியான ஒரு விஷயத்தை செய்யாத பட்சத்தில் இப்பொழுது செய்வதற்கு முக்கிய காரணம் விஜய்தான் இது தளபதிக்கு கிடைத்த வெற்றி தளபதி செய்த ஒரு விஷயத்தை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு அரசே அதை திரும்ப செய்ய நினைத்திருப்பது என்பது விஜய்யின் தொலைநோக்குப் பார்வையைதான் காட்டுகிறது என்று இது குறித்து பலவித கருத்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam