மாநாடு எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரத்தை மிஸ் செய்த முன்னணி நடிகர்..!

தமிழ் சினிமாவில் கமர்சியல் திரைப்படங்கள் இயக்கி வெற்றி பெற்ற இயக்குனராக பார்க்கப்படுபவர் தான் வெங்கட் பிரபு .

இவரது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் மாநாடு. இத்திரைப்படத்தில் சிம்பு ஹீரோவாக நடித்திருந்தார் .

சுரேஷ் காமாட்சி எழுதி தயாரித்திருந்த இந்த திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார்.

மாநாடு திரைப்படம்:

இவர்களுடன் வில்லன் ரோல் எஸ் ஜே சூர்யா நடித்து மிகப்பெரிய அளவில் புகழ் பாராட்டப்பட்டார். இதில் பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர் , கருணாகரன் , பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் துணை வேடங்களில் நடித்து அசத்தி இருந்தார்கள் .

இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. பல வருடங்களாக சிம்பு தொடர் தோல்வியை சந்தித்து வந்த சமயத்தில் மாநாடு திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகளும் அவருக்கு கிடைக்க தொடங்கியது. 2020 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக படப்பிடிப்புகள் தள்ளிப்போனது .

இதனால் படப்பிடிப்பு முற்றிலுமாக பாதிக்கப்பட்டதை அடுத்து முன்னதாக கமிட்டான ஒரு சில நடிகர் நடிகைகள் இப்படத்தை விட்டு வெளியேறினார்கள்.

எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பு:

அதன் பிறகு 2021 ஆம் ஆண்டில் படப்பிடிப்பு முடிவுக்கு வந்து பின்ன ரிலீசுக்கு தயாராக இருந்தது. நவம்பர் 4ம் தேதி 2021 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட இப்படம் மாபெரும் சாதனை படைத்த படமாக வசூல் வாரி குவித்தது.

இப்படத்திற்கு விமர்சனம் சிறப்பாக கிடைத்ததோடு படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் மற்றும் நடிகர் நடிகைகளின் நடிப்பு குறிப்பாக சிலம்பரசன் மற்றும் எஸ் ஜே சூர்யா வின் நடிப்பு பெருவாரியான மக்களால் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மாநாடு திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருந்த எஸ் ஜே சூர்யாவுக்கு முன்னதாக அரவிந்த்சாமி தான் கமிட் ஆகியிருந்தாராம்.

அவர் ஏன் இவ்விடத்தில் இருந்து விலகினார் என்பது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

மாநாடு திரைப்படத்தில் காமெடி நடிகரே தேவை இல்லை என்ற அளவுக்கு தன்னுடைய காமெடி கலந்த வில்லத்தனமான நடிப்பில் மிகவும் யதார்த்தமாக நடித்து ரசிகர்களின் கைதட்டல்களை பெற்றவர் தான் எஸ் ஜே சூர்யா.

அந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு அனைத்து தரப்பு மக்களாலும் வெகுவாக பாராட்டப்பட்டது. குறிப்பாக அவரது காமெடிக்கும் வில்லத்தனத்திற்கும் மாநாடு படத்தை பார்த்து பாராட்டினார்கள்.

கிட்டத்தட்ட ஹீரோவான சிம்புவுக்கு ஈடாக எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு அவ்வளவு பெரிய அளவில் பேசப்பட்டது என்றால் அது மிகையாகாது.

வாய்ப்பை தவறவிட்ட அரவிந்த்சாமி :

இந்த நிலையில் வெங்கட் பிரபு முதலில் இந்த நூலில் நடிக்க வைக்க இருந்தது நடிகர் அரவிந்த் சாமியை தான் அவரிடம் கதையை சொல்லி படத்திற்கு கால்ஷீட் கூட வாங்கி விட்டாராம்.

ஆனால் அரவிந்த்சாமியும் இந்த படம் கைவிடப்போகிறது என செய்திகள் வெளியான சமயத்தில் அடுத்தடுத்த படங்களில் கம்மிட் ஆகி வந்ததால் திடீரென இந்த படத்தில் கமிட்டாக முடியாத அளவுக்கு கால் சீட் கொடுக்க முடியாத அளவுக்கு இருந்தாராம்.

இதனால் வெங்கட் பிரபு பலமொழிகளில் இருந்து வில்லத்தனமான நடிகரை தேடி வந்தாராம். ஆனால் ஒருத்தரும் அவருக்கு செட்டாகவில்லை.

அந்த சமயத்தில் தான் கடைசியில் அவரது அசோசியேட் இயக்குனர் ஒருவர் எஸ் ஜே சூர்யாவின் பெயரை பரிந்துரைக்க உடனே எஸ்ஜே டக்கென்று இவர் பக்காவாக பொருந்துவாரே என ஞாபகத்துக்கு வந்துவிட்டார் .

எஸ் ஜே சூர்யா இப்படித்தான் இந்த திரைப்படத்தில் நுழைந்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடித்த எஸ் ஜே சூர்யா மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார்.

ஒருவேளை அரவிந்த்சாமி அந்த ரோலில் நடித்திருந்தால் கூட இந்த அளவுக்கு பேசப்பட்டு இருப்பாரா என்பது சந்தேகம் தான்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version