இசைஞானி இளையராஜாவின் தம்பியும் இசையமைப்பாளரும் ஆன கங்கை அமரனின் இளைய மகன் தான் பிரேம்ஜி அமரன்.
இவர் திரைப்பட நடிகராகவும், இசையமைப்பாளராகவும், பாடல் ஆசிரியராகவும், பாடகராவும் இருந்து வருகிறார் .
நடிகர் பிரேம்ஜி:
கங்கை அமரனுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதில் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருந்து வருகிறார்.
அவரது தம்பி தான் பிரேம்ஜி. பிரேம்ஜி தனது அண்ணன் இயக்கம் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் காமெடி ரோல்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
யுவன் சங்கர் ராஜாவின் உறவினரான பிரேம்ஜி அமரன் பெரும்பாலும் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் ராப் பாடல்களுக்கு இவர் பாடல் பாடிருக்கிறார்.
அவருடன் சேர்ந்து பணியாற்றியும் பிரபலமான பாடகராகவும் இருந்து வந்தார். முதன் முதலாக வல்லவன் திரைப்படத்தில் இடம் பெற்ற லூசு பெண்ணே பாடலையும் ரீமிக்ஸ் செய்திருக்கிறார்.
மேலும், இவர் அஜித்தின் தீவிரமான ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்துடன் மங்காத்தா திரைப்படத்தில் நடித்திருந்தார் .
மேலும், அத்துடன் சேட்டை, கோவா, சென்னை 28, உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து தனது அழுத்தமான கதாபாத்திரத்தின் மூலமாக மக்களிடையே பிரபலமானார்.
47 வயசாகியும் முரட்டு சிங்கிள் :
காமெடி நடிகராக பார்க்கப்பட்டு வந்த பிரேம்ஜி 47 வயதாகியும் இதுவரை திருமணம் செய்யாமலேயே முரட்டு சிங்கிளாக இருந்து வந்தார் .
அவ்வப்போது தான் அணியும் டீ-ஷர்டில் கூட முரட்டு சிங்கல் என்ற வாசகத்துடன் எழுதப்பட்ட டி ஷர்ட் அணிந்து வருவதால் இவருக்கு திருமணம் மீது இஷ்டமே இல்லையா? என பல கேள்வியும் கேட்டு வந்தனர் .
ஆனால், நடிகைகள் பலர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை பிரேம்ஜி வர்ணித்து சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆக பேசப்படுவார்.
தற்போது இவரது அண்ணன் வெங்கட் பிரபு விஜய் வைத்து கோட் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பிரேம்ஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் .
எப்போதும் அஜித்தின் தீவிர ரசிகராக அவருடன் திரைப்படங்களில் நடித்தவரும் பிரேம்ஜி தற்போது விஜய் திரைப்படத்தில் நடித்து வருவதால் இந்த படத்தில் அவருடைய காட்சி எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.
திடீர் திருமணம்:
இப்படியான நேரத்தில் பிரேம்ஜி திடீரென தன்னுடைய திருமணம் குறித்து அறிவிப்பை சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டார்.
அதை யாரும் நம்பும்படியாக இல்லை என ரசிகர்கள் கூறியதால் பின்னர் அவரது அண்ணனான வெங்கட் பிரபு அதனை உறுதிப்படுத்தினார்.
ஆம் உண்மையிலேயே பிரேம்ஜிக்கு திருமணம்தான் என கூறியிருந்தார். நேற்று திருத்தணியில் முருகன் கோவிலில் மிகவும் சிம்பிளாக திருமணம் செய்து கொண்டார்.
சேலத்தை சேர்ந்த இந்து என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவர் வங்கியில் பணியாற்றுபவர் என்றும் கூறப்படுகிறது.
இத்திருமணத்தில் பிரேம்ஜியின் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திதாக கூறப்படுகிறது .
மேலும் வைபவ், ஜெய் ,சிவா, அரவிந்த் ,ஆகாஷ், விஜே ரம்யா உள்ளிட்டோர் சேர்ந்து எடுத்துக் கொண்ட குரூப் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.
இந்நிலையில் தன்னுடைய திருமணம் குறித்தும் தனக்கு வரப்போகும் மனைவி குறித்தும் பல வருடங்களுக்கு முன் தன்னுடைய ஜாதகத்தில் போட்டு இருந்ததை என்னவென்று பிரேம்ஜி பேட்டி ஒன்றில் கூறியது தற்போது அப்படியே நடந்திருப்பது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது .
ஆம், சில வருடங்களுக்கு முன் பேட்டி ஒன்றில் என்னுடைய அம்மா எனக்கு ஒரு விஷயம் சொன்னார். அதாவது என்னுடைய ஜாதகத்தை சென்று பார்த்த போது, என்னுடைய மனைவி என்னிடம் கொடியில் காயும் புடவை எடுத்து வாங்க என்று சொன்னால் நான் அந்த புடவை எடுத்து சலவை செய்து மடித்து பெர்ஃபெக்டாக கொண்டு வந்து தருவேனாம்.
ஜாதகப்படி நடந்த சம்பவம்:
அந்த அளவுக்கு மனைவி ஒரு வேலை சொன்னால் அதை நான் சிறப்பாக செய்து முடிப்பேன். ஒருவேளை கொடுத்தால் 10 வேலை செய்வேன் என்று என்னுடைய அம்மா அப்பவே சொன்னார் என கூறி இருந்தார் பிரேம்ஜி.
தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. ஆம், அதாவது பிரேம்ஜி திருமணம் செய்து கொண்டிருக்கும் பெண் இந்து…. நாம் மிகவும் சிம்பிளாக திருத்தணி கோவிலில் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறினாராம் .
மனைவி பேச்சை தட்டாத பிரேம்ஜி அவருக்கு எந்த விதமான மறுப்பும் தெரிவிக்காமல் உடனடியாக ஓகே செய்து திருத்தணி கோவிலில் மிகவும் சிம்பிளாக திருமணம் செய்து கொண்டாராம்.
இதை பார்த்த ரசிகர்கள் அட…. ஜாதகத்தில் சொன்னபடியே மனைவி சொல்வதை அப்படியே கேட்க ஆரம்பித்து விட்டாரே பிரேம்ஜி. ஜாதகத்தில் என்ன இருந்ததோ அப்படியே நடக்க ஆரம்பிச்சிடுச்சு என கமெண்ட் செய்து வருகிறார்கள்.